முதல் படத்தின் சாயல் இல்லாமல் உருவாகும் "கும்கி 2" 

Asianet News Tamil  
Published : Jun 12, 2018, 02:53 PM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
முதல் படத்தின் சாயல் இல்லாமல் உருவாகும் "கும்கி 2" 

சுருக்கம்

kumki 2 movie is not follow the first part

2012 ம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில், லிங்குசாமி  தயாரிப்பில், விக்ரம் பிரபு – லஷ்மிமேனன் அறிமுகமான “ கும்கி “ படம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகும் "கும்கி 2"
படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு
விரைவில் துவங்க உள்ளது. நிறைய படங்களில் முதல் பாகத்தின் கதை
தொடர்ச்சியாகத்தான் இரண்டாம் பாகம் உருவாக்கப் பட்டிருக்கிறது. ஆனால் கும்கி
படத்திற்கும்,  கும்கி 2 படத்திற்கும் கதையளவில் எந்த சம்மந்தமும் இல்லை. யானை
சம்மந்தப் பட்ட கதை என்பதால் இதற்கும் கும்கி என்ற தலைப்பை தொடவேண்டி
இருக்கிறது என்கிறார் பிரபுசாலமன்.

இந்த படத்தில் நாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். நாயகி இன்னும் முடிவாக வில்லை என்றும் கூறப்படுகிறது, எனினும் இந்த படத்தில் புது நாயகி நடிக்க நிறைய வாய்புகள் உள்ளது. 

இந்த படத்தில் வில்லனாக ஹரிஷ் பெராடி நடிக்கிறார், மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி, சூசன், கோலங்கள் திருச்செல்வம், ஸ்ரீநாத், ஆகாஷ், மாஸ்டர் ரோகன், மாஸ்டர் ஜோஸ்வா, பேபி மானஸ்வி ஆகியோர் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Shaalin Zoya : புடவையில் வசீகரிக்கும் அழகு.. அம்சமாக அசத்தும் ஷாலின் ஜோயாவின் கூல் பிக்ஸ்!!
மகிழ்ச்சி நிறைந்த மற்றொரு வருஷத்துக்காக வெயிட்டிங்... வைரலாகும் நடிகை பாவனாவின் கல்யாண நாள் போஸ்ட்