New Releases : ஜூன் 20ந் தேதி தியேட்டர் & ஓடிடியில் இத்தனை புதுப்படங்கள் ரிலீஸ் ஆகுதா? முழு லிஸ்ட் இதோ

Published : Jun 19, 2025, 01:14 PM IST
Tamil Cinema

சுருக்கம்

ஜூன் 20ந் தேதி தனுஷின் குபேரா உள்ளிட்ட சில படங்கள் தியேட்டரிலும், முகென் ராவ் நடித்த ஜின் உள்ளிட்ட சில படங்கள் ஓடிடியிலும் ரிலீஸ் ஆகின்றன.

Theatre and OTT Release Movies : ஜூன் மாதம் தமிழ் சினிமாவுக்கு ஒரு வெற்றிகூட கிடைக்கவில்லை. இம்மாதம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தக் லைஃப் திரைப்படம் அட்டர் பிளாப் ஆனது. அதன்பின்னர் வெளிவந்த சண்முகப்பாண்டியனின் படைத் தலைவன் படமும் பெரியளவில் சோபிக்கவில்லை. இதனால் ஜூன் 20ந் தேதி வெளியாகும் படங்கள் மீது தான் அனைவரின் பார்வையும் திரும்பி உள்ளது. இந்த வார இறுதியில் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகிறது என்கிற பட்டியலை தற்போது பார்க்கலாம்.

தியேட்டரில் ரிலீசாகும் தமிழ் படங்கள்

ஜூன் 20ந் தேதி தனுஷ் நடித்த குபேரா படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை சேகர் கம்முலா இயக்கி உள்ளார். இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பான் இந்தியா அளவில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்துக்கு போட்டியாக நடிகர் அதர்வா நடித்துள்ள டிஎன்ஏ படமும் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கி உள்ளார். இதில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடித்துள்ளார். இதுதவிர நடிகர் வைபவ் நடித்துள்ள சென்னை சிட்டி கேங்ஸ்டர் என்கிற காமெடி திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் அதுல்யா ரவி ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள்

ஓடிடியில் இந்த வாரம் யோகிபாபு நடித்த ஜோரா கைய தட்டுங்க என்கிற திரைப்படம் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இதுதவிர பிரபு நடித்த ராஜபுத்திரன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த கலியுகம் ஆகிய திரைப்படம் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் ஜூன் 20ந் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகிறது. மேலும் முகென் ராவ் நடித்த ஜின் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஜூன் 20ந் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இதனுடன் சேவ் நல்ல பசங்க மற்றும் யுகி ஆகிய இரண்டு திரைப்படம் ஜூன் 20ந் தேதி முதல் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் மற்ற மொழி படங்கள்

பைனல் டெஸ்டினேஷன் பிளெட்லைன்ஸ் என்கிற ஹாலிவுட் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. மலையாளத்தில் கேரளா கிரைம் பைல்ஸ் சீசன் 2 என்கிற வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. அதேபோல் திலீப் நடித்த பிரின்ஸ் அண்ட் பேமிலி திரைப்படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் ஜூன் 20ந் தேதி ஸ்ட்ரீம் ஆக உள்ளது. தெலுங்கில் கொல்லா என்கிற திரைப்படம் ஈடிவி வின் ஓடிடி தளத்திலும் இந்தியில் சிஸ்டர் மிட்நைட் என்கிற படம் அமேசான் பிரைமிலும் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி