காசிருந்தா ரோடே போட்ருப்பேன்; ஆனா ஆம்புலன்ஸ் தான் வாங்கித்தர முடிந்தது- மலைகிராம மக்களுக்கு பாலா செய்த பேருதவி

Published : Jan 31, 2024, 08:27 AM ISTUpdated : Jan 31, 2024, 02:47 PM IST
காசிருந்தா ரோடே போட்ருப்பேன்; ஆனா ஆம்புலன்ஸ் தான் வாங்கித்தர முடிந்தது- மலைகிராம மக்களுக்கு பாலா செய்த பேருதவி

சுருக்கம்

நகைச்சுவை நடிகர் பாலா, மலைகிராம மக்களின் மருத்துவ வசதிக்காக புது ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கிக் கொடுத்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தன்னுடைய டைமிங் காமெடிகளால் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் பாலா. இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றதோடு மக்களின் அபிமான காமெடியனாகவும் உருவெடுத்தார். தற்போது சினிமாவிலும் செம்ம பிசியாக நடித்து வருகிறார் பாலா.

இவர் நடிப்பது மட்டுமின்றி சமூக நலப்பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் முதியோர் இல்லத்துக்கு உதவுவது, ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்வது மற்றும் மருத்துவ வசதி இன்றி கஷ்டப்படும் கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுப்பது என பாலா செய்த சேவைகள் ஏராளம். இதுவரை 4 ஆம்புலன்ஸை தன் சொந்த செலவில் வாங்கிக் கொடுத்து உதவியுள்ள பாலா, தற்போது 5வது ஆம்புலன்ஸை வாங்கி கொடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள்... இயலாதவர்களுக்கு இனி இலவச ஆட்டோ.. நடிகர் பாலாவின் அடுத்த முன்னெடுப்பு - மனதார வாழ்த்தி மகிழும் மக்கள்!

இந்த 5-வது ஆம்புலன்ஸ் தனக்கு மிகவும் ஸ்பெஷல் எனக் கூறிய பாலா, அதை வாணியம்பாடி அருகே உள்ள ஒரு மலைகிராம மக்களுக்கு வாங்கி கொடுத்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் சாலை வசதி இல்லாத கிராமத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை 7 கிமீ டோலியில் தூக்கி வந்து மருத்துவமனையில் அனுமதித்தது பற்றி செய்தித் தாளில் படித்துள்ளார் பாலா. அதைப்பார்த்ததும் அந்த கிராமத்துக்கு ஆம்புலன்ஸ் வாங்கித் தர முடிவெடுத்த அவர் தற்போது அதை செய்தும் காட்டியுள்ளார்.

சாலை வசதியே இல்லாத அந்த கிராமத்துக்கு தன்னிடம் காசு இருந்திருந்தால் ரோடே போட்டு கொடுத்திருப்பேன், ஆனால் அந்த அளவுக்கு பணமில்லாததால் ஆம்புலன்ஸ் மட்டும் வாங்கி கொடுத்துள்ளேன். இது அக்கிராம மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன் என பாலா கூறியுள்ளார். அவரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... முதன்முறையாக தன்னுடைய 3 பிள்ளைகளை அறிமுகப்படுத்திய குக் வித் கோமாளி பாலாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!