தமிழகத்தில் மட்டும் 'கோமாளிக்கு' இத்தனை கோடி வசூலா?

Published : Aug 16, 2019, 07:15 PM IST
தமிழகத்தில் மட்டும் 'கோமாளிக்கு' இத்தனை கோடி வசூலா?

சுருக்கம்

நடிகர் ஜெயம் ரவி, 'தனி ஒருவன்' படத்திற்கு பின், தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் கடைசியாக 'அடங்க மறு' திரைப்படம் வெளியானது.  

நடிகர் ஜெயம் ரவி, 'தனி ஒருவன்' படத்திற்கு பின், தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் கடைசியாக 'அடங்க மறு' திரைப்படம் வெளியானது.

இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததது. இந்நிலையில் தற்போது நடிகர் ஜெயம் ரவி, நடிப்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் 'கோமாளி'. நீண்ட வருடமாக கோமாவில் இருக்கும் ஒருவர், கோமாவில் இருந்து மீண்டதும், அவர் இந்த உலகத்தை எப்படி பார்க்கிறார் இதனால், வரும் பிரச்சனைகள் என்ன என்பதை காமெடியாக இயக்கியுள்ளார் கார்த்திக் தங்கவேலு.

இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக, நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ளார். நடிகை சம்யுக்தா ஹெக்டே,  யோகிபாபு, ஷாரா, ஆர்ஜே ஆனந்தி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நேற்றைய தினம் வெளியாகியுள்ள இந்த படத்தின் தமிழக வசூல்  ஒரு நாளில் மட்டும் ரூ.5.46 கோடி என கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான ஜெயம்ரவி படங்களில் அதிக வசூல் செய்தது இந்த படம் தான் என கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒசூரில் கடும் குளிரிலும் சால்வையை போர்த்திக் கொண்டு ஒத்திகை; இளையராஜாவின் செயலை வியந்த டீம்!
அப்பாவாக போகும் நாக சைதன்யா; சமந்தாவுக்கு கொடுக்கும் அதிரடி ஷாக்!