
இசை புயல், ஆஸ்கார் நாயகன், என்று கோலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஏ.ஆர்.ரகுமானை அவமதிக்கும் வகையில், பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆஸ்கர் விருது பெற்ற அந்த ஏ.ஆர்.ரகுமான் யார் என்றே தனக்கு தெரியாது என கூறியது மட்டும் இன்றி, இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருது தன்னுடைய தந்தையின் கால் நகத்திற்கு சமானம் என்பது போல் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாக பலர் நடிகர் பாலகிருஷ்ணாவை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். ஒரு கலைஞரை மற்றொரு கலைஞர் மதிக்க வேண்டும் என்பது போல் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர். தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் பாலகிருஷ்ணாவை விமர்சித்து பேசியது, டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் கோவத்தை ஏற்படுத்தவே, அவர்கள் கோலிவுட் ரசிகர்களுடன் ட்விட்டரில் மோதி வருகின்றனர்.
தென்னிந்தியாவை டாமினேட் செய்யும் டோலிவுட் என்பதை குறிக்கும் விதமாக #TwoodDominatingSouth என்ற ஹேஷ்டேக்கை டோலிவுட் ரசிகர்கள் வைரலாக்க துவங்கினர். கோலிவுட் ரசிகர்களும் சும்மா இருப்பார்களா..? இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவை டாமினேட் செய்யும் கோலிவுட் என்பதை குறிக்கும் வகையில் #KWoodDominatingIndia என்ற ஹேஷ்டேக்கை வைரலாக்கி வருகின்றனர்.
டோலிவுட் ரசிகர்கள் உருவாக்கிய ஹேஷ்டேக் அவ்வளவு எடுபடாத நிலையில், கோலிவுட் ரசிகர்கள் உருவாக்கிய #KWoodDominatingIndia என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் ஆகியுள்ளது. எப்போதும் தங்களுக்கு பிடித்த நடிகர்களுக்காக மோதிக்கொள்ளும் கோலிவுட் ரசிகர்கள் ஏ.ஆர்.ரகுமானை அவமதித்ததாக ஒன்று சேர்ந்து, இந்த ஹேஷ் டேக்கை வைரலாகி வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.