Vishal Movie Update : பிரபல நடிகர் விஷால், இப்பொது இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் ரத்னம் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் அந்த படம் குறித்த ஒரு தகவல் இப்பொது வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் கடந்த 19 ஆண்டுகளாக ஆக்சன் ஹீரோவாக திகழ்ந்துவரும் நாயகன் தான் விஷால். கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான "செல்லமே" என்ற திரைப்படத்தின் மூலம் இவர் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு இவர் நடிப்பில் வந்த "சிவப்பதிகாரம்", "தாமிரபரணி", "மலைக்கோட்டை" மற்றும் "தோரணை" உள்ளிட்ட திரைப்படங்கள் ஆக்சன் காட்சிகளுக்காகவே பெரிய அளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் கடந்த 2007 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் "தாமிரபரணி" என்கின்ற திரைப்படத்தில் நடித்த விஷால் அவர்கள் அதைத் தொடர்ந்து கடந்த 2014 ஆண்டு பூஜை என்ற திரைப்படத்தில் மீண்டும் இயக்குனர் ஹரியுடன் இணைந்து பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு படங்களும் விஷால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் சுமார் 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் "ரத்னம்" என்கின்ற திரைப்படத்தில் இயக்குனர் ஹரியுடன் இணைந்து இருக்கிறார் நடிகர் விஷால். முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த திரைப்படமாக இது உருவாகி வரும் இந்த சூழலில், இந்த படம் குறித்த ஒரு முக்கிய தகவலை தற்பொழுது விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியேற்றுள்ளார்.
அதில் பிரபல சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் அவர்கள் ஒரே சாட்டில் எடுக்கப்பட்ட ஒரு முழு நீள சண்டைக்காட்சியை ரத்தம் திரைப்படத்தில் இயக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரத்தம் படம் உருவான விதம் குதித்தும் ஒரு வீடியோவை நடிகர் விஷால் இப்பொழுது வெளியிட்டுள்ளார். இந்த திரைப்பட பணிகளை முடித்த பிறகு துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகப் பணிகளை நடிகர் விஷால் அவர்கள் துவங்க உள்ளார்.
ஏற்கனவே இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தை இயக்குனர் மிஸ்க்கின் இயக்கிய நிலையில், இரண்டாம் பாகத்தில் மிஸ்க்கின் மற்றும் விஷால் இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக அந்த திரைப்படத்திலிருந்து மிஸ்க்கின் விலகினார். தற்பொழுது துப்பறிவாளன் 2 திரைப்படத்தை நடிகர் விஷால் அவர்களே இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
A sneak peek into the making of - as myself, director , DOP and stunt master Kanal Kannan plan a single shot action sequence 🔥
▶️ https://t.co/Os1yledAFa
A film by . Coming to theatres, summer 2024 & a musical … pic.twitter.com/x9Ih7CaOso
இது அவர் இயக்குனராக களமிறங்கும் முதல் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2013 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான "பாண்டிய நாடு" என்ற திரைப்படத்தின் மூலம் நடிகர் விஷால் தயாரிப்பாளராகவும் திரைத்துறையில் களமிறங்கினார்.