
தனது வசீகர தோற்றத்தாலும், நடிப்பாலும் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த 90's கனவு கன்னியான குஷ்புவிற்கு கோவில் கட்டி கொண்டாடிய ரசிகர் பட்டாளம் உண்டு. வெள்ளி திரையை தொடர்ந்து சின்ன திரையிலும் மின்னிய குஷ்பு, தற்போது பாஜகவில் இணைந்து முழு நேர அரசியல் வாதியாக செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த இவர், தீபாவளி வரவான அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.
இதற்கிடையே தனது உடல் எடையில் கவனம் செலுத்தி மீண்டும் 90'S நாயகியாக உருமாறியுள்ள குஷ்பு, தனது அழகிய புகைப்படங்களை அவ்வப்போது சமூகவலைத்தளத்தில் பதிவிடுவதும் அந்த போஸ்டிற்கு ரசிகர்கள் ஆக ஓகோ என்று பாராட்டுவது வழக்கமான ஒன்றாகி விட்டது.
இது ஒருபுறம் இருந்தாலும் குஷ்புவின் மெலிந்த தோற்றத்தை பார்த்து சிலர் உங்களுக்கு உடல் நிலை சரியில்லையா என கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இன்றைய, அன்றைய புகைப்படங்களுடன் ட்வீட் செய்துள்ள குஷ்பு; "அங்கிருந்து இங்கு. 20 கிலோ எடை குறைத்த, நான் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன். உங்களை கவனித்துக் கொள்ளுங்கள், நினைவில் கொள்ளுங்கள், ஆரோக்கியமே செல்வம். என் உடம்பு சரியில்லையா என்று கேட்பவர்கள், உங்கள் அக்கறைக்கு நன்றி. இதற்கு முன்பு நான் அவ்வளவு ஃபிட்டாக இருந்ததில்லை. நான் உங்களில் 10 பேரையாவது உடல் எடையை குறைத்து, உடல் தகுதி பெற தூண்டினால், நான் வெற்றி பெற்றுள்ளேன் என்பது எனக்குத் தெரியும்."என பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.