cheran : பிக் பாஸுக்கு பிறகு சேரன் நடிக்கும் முதல் படம் : நாளை வெளியாகும் படத்தின் முக்கிய காட்சிகள்!!

Kanmani P   | Asianet News
Published : Dec 05, 2021, 01:23 PM IST
cheran : பிக் பாஸுக்கு பிறகு சேரன் நடிக்கும் முதல் படம் : நாளை வெளியாகும் படத்தின் முக்கிய காட்சிகள்!!

சுருக்கம்

AnandhamVilaiyadumVeedu : குடும்ப உறவுகள் சார்ந்த கதைக்களமான ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் , “ஆனந்தம் விளையாடும் வீடு”. இந்த படத்தில் நாயகியாக ஷிவத்மிகா  ராஜசேகர் நடிக்கிறார். மேலும் சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்ட ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொ மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் புகழ் சுஜாதா, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம் என ஒரு பெரும் நடச்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றனர்.

ஶ்ரீவாரி ஃபிலிம் சார்பில் தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கி வருகிறார். 'சிவப்பு மஞ்சள் பச்சை' புகழ் சித்துகுமார் இசையமைக்கும் இப்படத்தை  பி.ரங்கநாதன் தயாரித்து வருகிறார்.

இது குறித்து சமீபத்தியில் பேசியிருந்த தயாரிப்பாளர் “ஆனந்தம் விளையாடும் வீடு” படம் உருவாகி வரும் விதம், மனதிற்கு மிகுந்த திருப்தியை அளித்துள்ளது. சேரன் மற்றும் கௌதம் கார்த்திக் பங்குபெறும் காட்சிகள் மிக அற்புதமாக உருவாகியுள்ளது.  பல பெரிய நட்சத்திரங்கள் இணைந்து நடிப்பதும், படப்பிடிப்பில் குடும்ப உறவைகளைப் போலவே பழகுவதும் மனதிற்குப் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்  குடும்ப உறவுகள் சார்ந்த கதைக்களமான ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குனர் சேரன் நடித்துள்ளார் என்பதால் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதைத்தொடர்ந்து பிக் பாஸ் புகழ் ஆரிஅர்ஜுனன், உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!