
சோலார் பேனல் மோசடி வழக்கில் டிடிவி.தினகரனின் ஆதரவாளரான நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரளாவில் சோலார் பேனல் ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டவர் சரிதா நாயர். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த ஊழல் வழக்கில் அப்போது முதலமைச்சராக இருந்த உம்மன் சாண்டிக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறி அதிரவைத்தார். மேலும், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறினார். சிறையில் அடைக்கப்பட்ட சரிதா நாயர் பின்னர் ஜாமீனில் வெளிவந்து தற்போது கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைப் பகுதியில் பேப்பர் கப் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், 2009-ம் ஆண்டு கோவை வடவள்ளியில் நிறுவனம் நடத்தி, காற்றாலை அமைத்துக் கொடுப்பதாக அறிவித்தார். இதையடுத்து, வடவள்ளியை சேர்ந்த தியாகராஜன் ரூ.28 லட்சமும், ஊட்டியை சேர்ந்த வெங்கட்ரமணன், ஜோயோ ஆகியோர் ரூ.5½ லட்சமும் கொடுத்தனர். ஆனால் சரிதா நாயர் குறிப்பிட்டபடி காற்றாலை அமைத்து கொடுக்கவில்லை.
இதுதொடர்பாக சரிதா நாயர், அவரின் முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் மற்றும் மேலாளர் ரவி ஆகியோர் மீது போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு கோவை 6-வது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது. மேலும், அவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.