நினைத்தது கிடைத்த சந்தோஷத்தில் சசிகுமார்! கொண்டாட்டத்தில் படக்குழு!

By manimegalai aFirst Published Jul 10, 2019, 6:23 PM IST
Highlights

தமிழில் வரிசையாக ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வெற்றி பெரும் நிலையில், தற்போது நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கென்னடி கிளப்'.  இந்த படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ளார்.
 
ஏற்கனவே ஆண்களின் கபடி போட்டியை மையப்படுத்தி 'வெண்ணிலா கபடி குழு' என்கிற படத்தை இயக்கிய இவர், தற்போது பெண்கள் கபடி போட்டியை கருவாகக் கொண்டு இயக்கியுள்ள திரைப்படம் 'கென்னடி கிளப்'.  இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இதனால் படத்தை சென்சாருக்கு அனுப்பி வைத்திருந்தனர் படக்குழுவினர்.  அவர்கள் நினைத்தது போலவே இப்படத்திற்கு யூ சர்டிபிகேட் கிடைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த படத்தில் சசிகுமாரை தவிர, இயக்குனர் பாரதிராஜா, நடிகை காயத்ரி, சூரி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏற்கனவே விளையாட்டை மையப்படுத்தி, 'கனா',  'கில்லி', போன்ற படங்கள் வெளியாகி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

click me!