
நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட் திரையுலகில் முதல் முதலாக அறிமுகமாக உள்ள படத்தில், பிரபல நடிகர் அஜய் தேவ்கனுக்கு மனைவியாக நடிக்க உள்ளார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கிறார்.
குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான, 'மகாநதி' திரைப்படம், இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில், சாவித்திரியாகவே வாழ்ந்து நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ் என இவரை பாராட்டாத பிரபலங்களே இல்லை.
இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான 'சாமி 2 ' மற்றும் 'சண்டக்கோழி 2 ' ஆகிய படங்கள் தோல்வி அடைந்தது. எனவே தற்போது தேர்வு செய்யும் படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் இயக்குனர் அமித் ஷர்மா இயக்கத்தில், பாலிவுட் படத்திலும் நடிக்கிறார். ஸ்போர்ட்ஸ் டிராமா உருவாகும் இந்த படத்தில், 49 வயதாகும் பிரபல பாலிவுட் முன்னணி நடிகர் அஜய் தேவ்கனுக்கு மனைவியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.