ஒவ்வொரு முறையும் பயந்து நடுங்குகிறேன்! கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல்!

Published : Feb 20, 2019, 02:03 PM IST
ஒவ்வொரு முறையும் பயந்து நடுங்குகிறேன்!  கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல்!

சுருக்கம்

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். மேலும் படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது.   

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். மேலும் படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 

இந்நிலையில் சினிமா வாழ்க்கை அனுபவங்கள் பற்றி பிரபல நாளிதழ் ஒன்றில் கூறியுள்ளார் கீர்த்தி. இது குறித்து அவர் கூறுகையில்.... "சினிமாவை ஒவ்வொருவரும் வெவ்வேறு கோணத்தில் பார்ப்பார்கள். ஆனால் நடிகர்களுக்கு சினிமாதான் வாழ்க்கை. ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் ஒரு வாழ்க்கையை அனுபவிக்கிற மாதிரி நடிக்கிறோம்.  கதையைக் கேட்டபிறகு கதாபாத்திரத்தில் முழுமையாக நடிக்க முடியுமா? முடியாதா? என்று, பத்து முறை யோசிப்போம்.

அப்படியே நாங்கள் நடித்தாலும் அது ரசிகர்களுக்கு பிடிக்குமா? என்று சிந்திப்போம்.  இப்படி பல கேள்விகளோடு தான் படங்களை தேர்வு செய்து எல்லா நடிகர் நடிகைகளும் நடிக்கின்றனர்.  

மற்றவர்களை விட எனக்கு இந்த கேள்விகள் அதிகமாகவே வரும்.  இப்படி கேள்விகள் கேட்டு நடிப்பதால்,  எனக்கு நல்லது தான் நடந்திருக்கிறது. ஒரு சினிமாவில் நடிக்கும் போது, ஒரு லட்சம் சந்தேகங்கள், பயங்கள், வந்தாலும் எல்லாவற்றிற்கும் இயக்குனரிடம் பதில் இருக்கும்.

ஆனாலும் ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் எனக்கு பயம் வந்து என்னை நடுங்க செய்யும். அப்போதைக்கு அந்த பயம் படபடப்பை ஏற்படுத்தலாம், முடிவில் எனக்கு நல்லதாக இருக்கும். இதனால் நான் நடிக்கும் கதாபாத்திரத்தில் இன்னும் அக்கறை செலுத்த முடிகிறது.

சினிமா பயணம் ஒரு சஸ்பென்ஸ் கதை மாதிரி இருக்க வேண்டும். குறிப்பாக 'மகாநதி' படம் நடிக்கும் போது பயந்து நடித்தேன்.  ஆனால் அது  வெற்றி பெற்ற போது,  அனுபவித்த சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்". 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி