அரசியலை ஒதுக்கி வச்சிட்டு இரட்டை வேடத்தில் கலக்க வரும் ரஜினிகாந்த்! இரண்டு நாயகியை கொத்தா தூக்கிய தலைவர்!

Published : Feb 20, 2019, 01:27 PM IST
அரசியலை ஒதுக்கி வச்சிட்டு இரட்டை வேடத்தில் கலக்க வரும் ரஜினிகாந்த்! இரண்டு நாயகியை கொத்தா தூக்கிய தலைவர்!

சுருக்கம்

ரஜினிகாந்தின் ரசிகர்கள் அவரின் அரசியல் பிரவேசத்திற்காக காத்திருந்தாலும், தலைவரோ தன்னுடைய அரசியல் முடிவை தள்ளி போட்டுக்கொண்டே போகிறார். மேலும் அடுத்த வருடம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம், கட்சி தொடங்கி முழுநேர அரசியலில் குதிக்க உள்ளார் என கூறப்படுகிறது.  

ரஜினிகாந்தின் ரசிகர்கள் அவரின் அரசியல் பிரவேசத்திற்காக காத்திருந்தாலும், தலைவரோ தன்னுடைய அரசியல் முடிவை தள்ளி போட்டுக்கொண்டே போகிறார். மேலும் அடுத்த வருடம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம், கட்சி தொடங்கி முழுநேர அரசியலில் குதிக்க உள்ளார் என கூறப்படுகிறது.

அதற்கு முன்பாக முடிந்த வரை திரைப்படங்களில் முழு கவனத்தையும் செலுத்த முடிவு செய்துள்ளார்.  அந்த வகையில் 'பேட்ட' படத்தின் வெற்றியை தொடர்ந்து  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். 

இது ரஜினிகாந்துக்கு 166வது படமாகும்.  படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இதற்கு முந்தைய படங்களில்,  லஞ்சம்,  விவசாயிகள் பிரச்சினைகள்,  ஊழல்,  ஆகியவற்றை சொல்லியிருந்தார்.  

எனவே ரஜினியை வைத்து அடுத்ததாக இயக்க உள்ள படத்தை முழு அரசியல் படமாக எடுக்க முடிவு செய்திருப்பதாகவும்,  படத்துக்கு 'நாற்காலி' என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல் பரவியது.  ஆனால் படத்துக்கு 'நாற்காலி' என்று பெயரை தேர்வு செய்யவில்லை என்று முருகதாஸ் இந்த தகவலை மறுத்தார்.

படத்தில் நடிக்கும் இதர நடிகர் நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்து வெளியான தகவலில், இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாகவும்,  சமூக சீர்திருத்த போராளியாகவும் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் உலா வருகிறது.

ஆனால் இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை ஏற்கனவே அவர் அதிசய பிறவி, போக்கிரி ராஜா, ராஜாதி ராஜா, ஜனனி, பில்லா எந்திரன், உள்ளிட்ட பல படங்களில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக முதலில் நடிகை கீர்த்தி சுரேஷ் பெயர் அடிப்பட்டது. ஆனால் இப்போது நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.  ஒருவேளை இந்த படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்தால் இரண்டு நாயகிகளும் இந்த படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு அடuooன்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி