
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மானாட மயிலாட', 'நாளைய இயக்குனர்' போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் 'கீகீ' என அனைவராலும் அழைக்கப்படும் கீர்த்தி.
இவர், பிரபல நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் - பூர்ணிமா நட்சத்திர தம்பதிகளின் மகன் சாந்தனுவை, காதலித்து கடந்த 2015 ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்பும், தன்னுடைய தொகுப்பாளர் பணியை தொடர்ந்து வருகிறார் கீர்த்தி. இந்நிலையில் தன்னுடைய மாமனார் - மாமியார் பற்றி கீர்த்தி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் "என் மாமனார் வீட்டில் அதிக நேரம் இருக்க மாட்டார். மாமியாரை சுலபமாக ஏமாற்றி விடலாம். எது சொன்னாலும் அவர் நம்பி விடுவார். என் பிறந்த வீட்டில் இருந்ததை விட, புகுந்த வீட்டில் தான் சுதந்திரமாக இருக்கிறேன்" என்கிறார் கீர்த்தி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.