
நடிகரும், முன்னாள் எம்.பி-யுமான ஜே.கே.ரித்தீஷ் நேற்று மதியம் உணவு இடைவேளையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மறைந்த சுதீஷின் வள்ளல் குணத்தைப்பற்றி நடிகர்கள் சிலர் கவலையோடு கூறினார்.
நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் வேட்பாளர்களுக்கு ஆதரவாக ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் ரித்தீஷ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார், இவருடன் நகைச்சுவை நகைச்சுவை நடிகர்கள் போண்டா மணி, விஜய் கணேஷ், சுப்புராஜ் ஆகியோரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று பரமக்குடி தொகுதியில் உள்ள போகலூர் ஒன்றியத்தில் நகைச்சுவை நடிகர்களுடன் ஜே.கே.ரித்தீஷும் பங்கேற்றார். பிரசாரத்திற்குப் பின்னர் பின்னர் மதிய உணவுக்காக ராமநாதபுரம் ராஜா சேதுபதி நகரில் உள்ள ரித்தீஷின் வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு உணவு உண்ட நகைச்சுவை நடிகர்கள் மூவரும் அடுத்து பிரசாரத்திற்கு செல்லக் காத்திருந்த நிலையில் ரித்தீஷ் மாரடைப்பால் உயிரிழந்தார்.
ரித்தீஷின் உடலைக் கண்டா அவர்கள் கண்ணீர் விட்டுக் கதறினர். பிறகு, கண்கலங்கியபடியே சோகத்துடன் ரித்தீஷின் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அவர்கள் பல்வேறு தகவல்களை சொல்லியிருக்கிறார்கள்.
ரித்தீஷ் குறித்து பேசும்போது, திரைத்துறை மற்றும் நாடகத்துறையில் நலிந்த பல கலைஞர்களுக்கு கணக்கே பாக்காம உதவிகள் செய்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர். உதவின்னு யாரு தன்னை தேடி வந்தாலும் அள்ளிக் கொடுத்த வள்ளலாக வாழ்ந்து வந்தாரு ரித்திஷ். எங்களைப் போன்ற சிறிய கலைஞர்களுடன் வித்தியாசம் இன்றி பழகினாரு.
அதுமட்டுமல்ல, பசி பட்டினியேன, எத்தனையோ பேருக்கு வெளியில் சொல்லாமல் உதவி அளித்து அவர்களின் வாழ்வில் நிம்மதி அடையச் செய்தவர். அத்தகைய வள்ளலை இழந்ததன் மூலம் நாங்களும் நிம்மதி இழந்து தவிக்கிறோம் என்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.