
Kayal Chandran Singha Movie First Look Poster : இயக்குநர் ராஜா துரை சிங்கம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் தான் சிங்கா. இவர், இயக்குநர்கள் வசந்த், சற்குணம் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இதைத் தொடர்ந்து தற்போது புதிய முயறியாக படங்களை இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் உருவாகி வரும் சிங்கா படத்தில் கயல் சந்திரன் ஹீரோவாக நடிக்கிறார். கயல் படத்தின் மூலமாக அனைவரது கவனம் ஈர்த்த சந்திரனுக்கு இந்தப் படம் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான அன்பையும், பிணைப்பையும் கொண்டாடும் குடும்பக் கதையை மையப்படுத்திய படமாக சிங்கா உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் கயல் சந்திரன் உடன் இணைந்து சிஜா ரோஸ், மீனாட்சி, ஆதித்யா கதிர், அரிஸ்டோ சுரேஷ் ஆகியோர் பலரும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமி இசையமைக்க, அசோக் குமார் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த நிலையில் தான் இந்தப் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக நாய்கள் தொடர்பாக பல படங்கள் வந்திருந்தாலும் இந்தப் படம் சற்று வித்தியாசமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.