திருமணம் முடிந்த கையேடு... உண்மை சம்பவத்தில் நடிக்கும் 'கயல்' ஆனந்தி..!

Published : Feb 17, 2021, 12:21 PM IST
திருமணம் முடிந்த கையேடு... உண்மை சம்பவத்தில் நடிக்கும் 'கயல்' ஆனந்தி..!

சுருக்கம்

நடிகை கயல் ஆனந்திக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்த நிலையில், தற்போது உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தில் நாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.  

நடிகை கயல் ஆனந்திக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்த நிலையில், தற்போது உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தில் நாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
 
கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து நடிப்பில் ஈடுபாட்டை செலுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் சாம் ஜோன்ஸ். 'ஏமாலி', 'லிசா' உள்ளிட்ட படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.

இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தாமரைச் செல்வன் இயக்கும் “நதி” எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் கதாநாயகனாக நடிப்பதோடு மட்டுமன்றி கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இப்படத்தை நடிகர் சாம் ஜோன்ஸ் தனது தயாரிப்பு நிறுவனம் “மாஸ் சினிமாஸ்” சார்பாக தயாரிக்கிறார். “நதி” படத்தின் கதை உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், திருமணம் ஆன கையேடு கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார்.

பிரபல தெலுங்கு நடிகை சுரேகவாணி, முனிஸ்காந்த், வேலா ராமமூர்த்தி, வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் வில்லன் கதாபாத்திரம் கதாநாயகனுக்கு நிகரானது என்பதால் பிரபல இயக்குநர் ஒருவரை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. M.S.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளராக 'கனா' படத்தின் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸும் பணியாற்றுகின்றனர். “நதி” படத்தின் காட்சிகள் மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. இறுதி கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அய்யய்யோ மீனா கண்டுபிடிச்சிட்டாளே... சீட்டிங் பண்ணி சிக்கிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
அஞ்சானை அரெஸ்ட் பண்ண உத்தரவா? கைது நடவடிக்கை பற்றி உண்மையை போட்டுடைத்த லிங்குசாமி