
கவின் லாஸ்லியாவை சுற்றி சுற்றி வர இதுதான் காரணமா..?
கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. முதல் வாரத்தில் முதல் ஆளாய் உள்ளே சென்ற பிரபல செய்தி வாசிப்பாளரான பாத்திமா பாபு எலிமினேட் ஆனார்.
இது ஒருபக்கமிருக்க தொடக்கம் முதலே பிக்பாஸ் வீட்டிற்குள் எப்போதும் நான்கு பெண்களுடன் லவ்வர் பாயாக சுற்றி வந்த கவின் திடீரென லாஸ்லியா பக்கம் திரும்பியிருக்கிறார். அதற்கு பின் என்ன காரணமாக இருக்கும் என சாக்ஷி உள்பட மற்ற இருவரும் தலையை பிய்த்துக்கொள்கின்றனர். அதற்காக கவினுடன் சண்டையும் போட்டுக் கொள்கிறார்.
ஆனால் கவினின் இந்த செயலை ஆடியன்ஸ் கொஞ்சம் வெறுக்க தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக. " கவினிடம்... இப்படியே இந்த நாலு பொண்ணுங்க பின்னாடி சுத்திக்கிட்டு இருந்தா உனக்கு இன்னும் மவுசு குறைந்து விடும்.. அதுக்கு பதிலா லாஸ்லியா பக்கம் திரும்பி விடு என சொன்னாங்களாம். அதனால் தான் இப்ப கவினும், லாஸ்லியாவும் அடிக்கடி பேசி வருவதை பார்க்க முடிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.