
அட என்னதான் நடக்குது இந்த பிக்பாஸ் வீட்டுல? முதல்ல கவினை காதல் வலையில் சிக்க வைக்க, அபிராமி படாத பாடு பட்டார். முடியாமல் போனதால், இப்போது சைலண்டாக சண்டை வாங்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில், தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என இருக்கும் லாஸ்லியாவிடம் வாண்டடாக சென்று கவின் பேச அதற்கு மூஞ்சில் அடித்தது போல் பதில் சொல்லுவது ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் கவின் மீண்டும் லாஸ்லியாவிற்கு நூல் விடுகிறார். 'உனக்கு என்ன வேண்டும்' என்று கவின் கேட்க அதற்கு லாஸ்லியா 'எனக்கு எதுவும் தேவையில்லை ஒண்ணும் வேண்டாம்' என்று மறுக்கின்றார். மத்தவங்க அவங்களுக்கு என்ன வேணுமோ கேக்குறாங்க உனக்கு என்ன வேண்டும்னு மீண்டும் மீண்டும் கேட்க, சாக்ஷி இவர்களுக்கு இடையே என்ன பிரச்சனை என தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்.
ஆனால் ஒன்றும் இல்லை என லாஸ்லியா தெரிவிக்கிறார். ஒரு வேலை இன்றைய ப்ரோமோவில், நீ என்னை பார்த்தாலும் பேச கூடாது என்பதை மனதில் வைத்து கொண்டு, கவினிடம் ஒருவேளை லாஸ்லியா பேச மறுக்கவும் வாய்ப்பு உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.