"என்னை மாதிரி இல்லாமல் எல்லோரும் நல்ல புள்ளைங்களா இருங்க!" - 'வெற்றி மகன்' கவினிடமிருந்து வந்த குழந்தைகள் தின வாழ்த்து! மாஸ் காட்டிய கவின் ஆர்மி!

Published : Nov 14, 2019, 10:20 PM IST
"என்னை மாதிரி இல்லாமல் எல்லோரும் நல்ல புள்ளைங்களா இருங்க!" - 'வெற்றி மகன்' கவினிடமிருந்து வந்த குழந்தைகள் தின வாழ்த்து! மாஸ் காட்டிய கவின் ஆர்மி!

சுருக்கம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' தொடர் மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். பின்னர், சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு ப்ரமோஷன் ஆன அவர், 'நட்புனா என்னனு தெரியுமா' படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். 

2 ஆண்டு காத்திருப்புக்குப் பின், கடந்த மே மாதம் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. 
இதனிடையே, அண்மையில் நடந்து முடிந்த 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சியில் பங்கேற்ற கவின், 5 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறினார். 

நிகழ்ச்சியின் ஆரம்பக்கட்டத்தில் தனது மோசமான திட்டத்தால் அதிகம் விமர்சனத்துக்கு ஆளான அவர், தனது பாஸிட்டிவ்வான நடவடிக்கைகளால் அந்த பிரச்னைகளில் இருந்து  மீண்டு வந்து ரசிகர்களின் மனங்களை வென்றார். அத்துடன், பிக்பாஸில் அவர் காட்டிய நேர்மை, சக போட்டியாளர்களை அணுகியவிதம் மற்றும் லாஸ்லியாவுடனான ரொமான்ஸ் என அவரது க்யூட்டான நடவடிக்கைகள் அனைத்தும் ரசிகர்களை வெகவாக கவர்ந்தது. 

இதன் காரணமாகவே, தற்போது பல லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் அண்ணனாக, தம்பியாக, பிள்ளையாக சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளார் கவின். 
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும், சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அவரது ரசிகர்கள், கவினின் அடுத்த திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய சிறுவயது போட்டோவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், பேஸிக்கா நான் நல்ல பையன்.. கொஞ்சம் தா... என்னை மாதிரி இல்லாம எல்லோரும் நல்ல புள்ளைங்களா இருங்க. குழந்தைகள் தின வாழ்த்துகள்'' என்று கவின் தெரிவித்துள்ளார். 

தங்களின் ஆதர்ஷன நாயகன் கவினிடமிருந்து வந்துள்ள இந்த பதிவுக்கு, அவரது ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். 
இதனிடையே, #KavinFansSolicitousChildsDay என்ற ஹேஷ் டேக்கை உருவாக்கி சமூக வலைதளங்களில் குழந்தைகள் தின கொண்டாட்ட பதிவுகளை பகிந்து வரும் கவின் ஆர்மியினர், பல்வேறு பகுதிகளில் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் மாஸ் காட்டி வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?