நீங்க குடிக்க மாட்டிங்களா...? "தமிழனென்று சொல்லடா, தள்ளாடி நில்லடா" என நக்கலடித்த நாயகி...பதிலடி கொடுக்க களமிறங்கிய நெட்டிசன்கள்...!

Published : Oct 31, 2019, 02:17 PM IST
நீங்க குடிக்க மாட்டிங்களா...? "தமிழனென்று சொல்லடா, தள்ளாடி நில்லடா" என நக்கலடித்த நாயகி...பதிலடி கொடுக்க களமிறங்கிய நெட்டிசன்கள்...!

சுருக்கம்

தீபாவளி பண்டிகையின் போது டாஸ்மாக் விற்பனை இலக்கை எட்டித் தாண்டி கூடுதலாக விற்பனையானது. தமிழக அரசின் இந்த அசுர சாதனையை கிண்டலடிக்கும் விதமாக நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நீங்க குடிக்க மாட்டிங்களா...? "தமிழனென்று சொல்லடா, தள்ளாடி நில்லடா" என நக்கலடித்த நாயகி...பதிலடி கொடுக்க களமிறங்கிய நெட்டிசன்கள்...!

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் தமிழகத்தில் மது விற்பனை செய்து வருகிறது. பள்ளி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை போதைக்கு அடிமையாக காரணமான டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது. ஆனால் பண்டிகை காலங்களில் டாஸ்மாக்கின் ஜோர் விற்பனையோ குறைந்தபாடில்லை. பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி தெருவுக்கு, தெரு டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறந்துகொண்டு தான் இருக்கிறது. 

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை அறிவித்திருந்தது. அந்த 3 நாட்களில் 25 நாட்களுக்கு விற்க வேண்டிய மது வகைகள் படுஜோராக விற்பனையானதாக தகவல் வெளியானது. தமிழக அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிகரித்த டாஸ்மாக் விற்பனை, 455 கோடி ரூபாயை தொட்டது. பொருளாதார மந்தநிலையால் பட்டாசு, புத்தாடை, வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை பாதிக்கப்பட்டாலும், டாஸ்மாக் விற்பனை என்னமோ குறையவில்லை. <

/p>

இந்நிலையில் தமிழக அரசின் டாஸ்மாக் விற்பனையை நையாண்டி செய்யும் விதமாக நடிகை கஸ்தூரி டுவிட்டர் பதிவிட்டுள்ளார். அதில் தமிழகம் - அசுர சாதனை, டாஸ்மாக் விற்பனையில் தமிழக அரசு சரித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 3 நாள் டாஸ்மாக் விற்பனையை தேதி வாரியாக பட்டியலிட்டுள்ள அவர், இறுதியாக தமிழனென்று சொல்லடா, தள்ளாடி நில்லடா என நக்கலடித்துள்ளார். ஆனால் நல்ல எண்ணத்தோட கஸ்தூரி போட்ட பதிவு, அவங்களுக்கே ஆப்பா மாறியிருக்கு. அந்த டுவிட்டர் பதிவில் கமெண்ட் செய்துள்ள குடிமகன்கள் சிலர், நீங்க குடிக்க மாட்டிங்களா, நீங்க எத்தனை பார்ட்டில சரக்கு அடிச்சிங்கன்னு சகட்டு மேனிக்கு கலாய்க்க ஆரம்பிச்சாட்டாங்க. ஆனால் யாரைப் பற்றியும் கவலைப்படாத கஸ்தூரி, சளைக்காம நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்க்கு ரிப்ளே கொடுத்துட்டு இருக்காங்க.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?