அய்யோ பாவம்... ஜெயிலுக்கு போன கஸ்தூரி! கண்டுக்காம சண்டை போடும் போட்டியாளர்கள்!

Published : Aug 14, 2019, 04:24 PM IST
அய்யோ பாவம்... ஜெயிலுக்கு போன கஸ்தூரி! கண்டுக்காம சண்டை போடும் போட்டியாளர்கள்!

சுருக்கம்

பிக்பாஸ் வீட்டில் வனிதா விருந்தினராக வீட்டிற்குள் வந்ததும், வந்த வேலையை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறார். கடந்த வாரம் முழுவதும், பிரபலங்களுக்குள் பெரிதாக எந்த ஒரு பிரச்னையும் இல்லை என்பதே ரசிகர்களின் கருத்தாக இருந்த நிலையில், தற்போது பிரச்சனை மட்டும் தான் நடந்து வருகிறது.  

 பிக்பாஸ் வீட்டில் வனிதா விருந்தினராக வீட்டிற்குள் வந்ததும், வந்த வேலையை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறார். கடந்த வாரம் முழுவதும், பிரபலங்களுக்குள் பெரிதாக எந்த ஒரு பிரச்னையும் இல்லை என்பதே ரசிகர்களின் கருத்தாக இருந்த நிலையில், தற்போது பிரச்சனை மட்டும் தான் நடந்து வருகிறது.

நேற்றைய தினம் முகேன், அபிராமியை  ஏமாற்றி வருவதாகவும். அவருக்கு ஏற்கனவே வெளியே ஒரு காதலி இருக்கும் போது, அபிராமியே நெருங்கி வந்தாலும், முகேன் விலகி இருக்க வேண்டும். அபிராமியை நன்கு பயன் படுத்தி கொண்டார் என புகார் ஒன்றை வைக்க, அது பிக்பாஸ் வீட்டில் காட்டு தீயாக பற்றி எரிந்தது.

பின், முகேன் மற்றும் அபிராமி இருவரும் அழ ஆரம்பிக்க, மாறி மாறி பிக்பாஸ் வீட்டில் உள்ள, போட்டியாளர்கள் தங்களுடைய ஆறுதலை தெரிவித்தனர். குறிப்பாக கஸ்தூரி எது கூற வந்தாலும், அதனை உதாசீனம் செய்வது போலவே நடந்து கொண்டார் அபிராமி.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க, இன்று மது மற்றும் கவின் இடையே பிரச்சனைகள் உருவாவது, தற்போது வெளியிடப்பட்டுள்ள ப்ரோமோவில் காட்டப்பட்டது. அந்த வகையில் சற்று முன் வெளியான ப்ரோமோவில், மதுமிதா பெண்களை ஆண்கள் அடிமை படுத்துவதாக கூறியதை தொடந்து, இதுகுறித்து அனைத்து போட்டியாளர்களும் தீவிரமாக விவாதிக்கிறார்கள்.

இத்தனை நாள் சண்டைனு வந்துட்டா குரல் கொடுக்காத சாண்டி கூட குரலை உயர்த்தி பேசுகிறார். கவின் காலில் காயங்களுடன் அழுத வாறு அமர்ந்துள்ளார். பின் ஜெயில் உள்ளே கஸ்தூரி அமர்ந்திருக்கும் காட்சிகளும் காட்டப்படுகிறது. ஏன் கஸ்தூரிக்கு இந்த நிலை என்பது இன்றைய நிகழ்ச்சியை பார்த்தல் தான் தெரிய வரும்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி