
நடிகை கஸ்தூரி, தற்போது மீண்டும் திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்த துவங்கியுள்ளார். தற்போது போலீஸ் அதிகாரியாக மிகவும் போல்ட்டான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சினிமா மட்டும் இன்றி, அரசியல் விஷயத்திலும் தன்னுடைய மனதில் படும் கருத்தை, தைரியமாக தெரிவித்து வருகிறார். அதே நேரத்தில் பாகுபாடு இன்றி, சில அரசியல் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.
மேலும் சமூக அக்கறை கொண்ட செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் வெளியான நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவிகள் சிலர் தற்கொலை முடிவை கையில் எடுத்த போது, அவர்களை ஊக்க படுத்தும் விதமாக ஒரு ட்விட் போட்டிருந்தார். இது, அனைவராலும் வரவேற்கப்பட்டது.
இந்நிலையில் மழையில் மழையாக மாறியுள்ளார் கஸ்தூரி. இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், மிகவும் குட்டியான ஆடை அணிந்து மழையில் ஆட்டம் போடுகிறார். இதற்கு சிலர் விமர்சித்து வந்தாலும், சில ரசிகர்கள் இந்த வீடியோவில் கஸ்தூரி பார்ப்பதற்கு மிகவும் கியூட்டாக இருக்கிறார் என கூறி வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.