இனி 24 மணிநேரமும் திரையரங்கங்களில் சினிமா! எந்த அளவிற்கு சாத்தியம்?

By manimegalai aFirst Published Jun 7, 2019, 7:27 PM IST
Highlights

24 மணிநேரமும் வணிக நிறுவனங்கள் திறக்கப்படும் என தமிழக அரசு சார்பில் வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் பெண்கள் இரவு நேரங்களிலும், எந்த பயமும் இன்றி வெளியில் செல்லலாம் என்றும் வேலை வாய்ப்பு அதிகரிக்கவும் இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என கூறப்பட்டது.
 
அதன்படி,  தமிழகத்தில் 24 மணி நேரமும் திரையரங்கங்கள் இயங்கவும்  தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது.

முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் வெளியாகும் போது, சிறப்பு காட்சி ஒளிபரப்பவே, அனுமதி பெற வேண்டும் என்கிற நிலை இருந்த நிலையில், 24 மணிநேரமும் திரையரங்கம் இயங்கலாம் என கூறப்பட்டுள்ளது, திரையரங்க உரிமையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும் விதமாக இருந்தாலும், இது எந்த அளவுக்கு சாத்தியம் என்கிற கேள்வியையும் எழுப்ப செய்துள்ளது.

முன்னணி நடிகர்கள் படங்கள் ரிலீஸ் ஆகும் நாட்களில் 24 மணிநேரமும் ரசிகர்கள் திரையரங்கங்களில் நிரம்பி வழிவார்கள், ஆனால் அணைத்து படங்களுக்கும் அத்தகைய வரவேற்பு எல்லா நேரங்களிலும் கிடைத்து விடுவது இல்லை. எனவே, இந்த முறையை திரையரங்கு உரிமையாளர்கள் அணைத்து நாள்களிலும் பின்பற்று வார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

அதே போல் பல நடுத்தர குடும்பத்தினர் டிக்கெட் விலையை தவிர்த்து, திரையரங்குகளில் அதிக விலையில் விற்கப்படும் ஸ்னாக்ஸ், பார்க்கிங் கட்டணம் ஆகியவற்றிக்கு பயந்தே திரையரங்கம் வர அஞ்சுகின்றனர். ஒருவேளை 24 மணிநேரம் திரையரங்கம் இயங்கும் பட்சத்தில், அதன் கட்டணங்கள் குறைக்கப்படுமா என்பதும் பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

click me!