பாண்டவர் அணியின் பட்டையை கிளப்ப வரும் கே.பாக்யராஜ்!

By manimegalai aFirst Published Jun 7, 2019, 6:52 PM IST
Highlights

கடந்த முறை தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், வெற்றி பெற்ற பாண்டவர் அணியை சேர்ந்தவர்களின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து,  2019-2022 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்ய, வரும் 23 ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ளது.
 

கடந்த முறை தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், வெற்றி பெற்ற பாண்டவர் அணியை சேர்ந்தவர்களின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து,  2019-2022 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்ய, வரும் 23 ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தல், ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.  வருகிற 23-ந்தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுறத்தில் உள்ள, டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணியின் சார்பில்,  மீண்டும் தலைவர் பதவிக்கு நடிகர் நாசர் போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் போட்டியிட உள்ளனர். 

அதே போல் துணைத்தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பூச்சிமுருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு
ஸ்ரீமன், பசுபதி, ரமணா, நந்தா, தினேஷ், சோனியா போஸ், கோவை சரளா ,  உள்ளிட்ட பலர் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாண்டவர் அணிக்கு எதிராக, யார் போட்டியிட உள்ளார் என்கிற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் அதிகமாகவே இருந்த நிலையில், இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ் நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ் போட்டியிட உள்ளார். துணை தலைவர் பதவிக்கு நடிகர் உதயா மற்றும் குட்டிபத்மினி போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. 

விஷால் அணியினருக்கு ஆதரவாக இருந்து வந்தவர்களே, அவர்களுக்கு எதிராக திரும்பியுள்ளதால், இந்த முறை நடிகர் சங்க தேர்தலுக்கு  கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!