மகன் நடித்த அசுரன் படத்திற்கு கருணாஸ் கடும் எதிர்ப்பு... சாதி வெறி யாருக்கு..?

Published : Oct 07, 2019, 11:30 AM IST
மகன் நடித்த அசுரன் படத்திற்கு கருணாஸ் கடும் எதிர்ப்பு... சாதி வெறி யாருக்கு..?

சுருக்கம்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்தில் கருணாஸின் மகன் கென் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நிலையில் கருணாஸ் இந்தப் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துளார்.  

இது குறித்து கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் இயக்கி வெளிவந்துள்ள ‘அசுரன்’ திரைப்படத்தில் “ஆண்ட பரம்பரை நாங்க தான்.. எங்ககிட்டேருந்து உங்களுக்கு எடம் வந்ததா? இல்லை உங்கக்கிட்டேருந்து எங்களுக்கு எடம் வந்ததா! என்ற வசனம் வருமிடத்தில் எதிர் தரப்பினர் பேசும் உரையாடலில் “எத்தனை நாளாடா சொல்லிக் கிட்டே இருப்பீங்க ஆண்ட பரம்பரைன்னு” என்று முக்குலத்தோர் சமூக மக்களை இழிவுபடுத்தும் விதமாக உரையாடல் அமைந்திருக்கிறது.

 

இந்த வசனம் எங்களது முக்குலத்தோர் சமுதாயத்தினரை இழிவு படுத்துவது போல இருப்பதாகவும் இதனை நீக்குமாறும் வெற்றிமாறனிடம் கூறியிருந்தேன். என்னுடைய கோரிக்கையை ஏற்று இந்த வசனத்தை நீக்கியதற்கு நன்றி. திரைப்படம் சமூகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்க வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்தும் விதமாக இருக்க கூடாது. நமது முகத்தை காட்டும் கண்ணாடி மீது கல் எறிந்தால் கண்ணாடி உடைந்து பலரின் பாதங்களை கிழித்து விடும் ’’ என எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். 

அசுரன் திரைப்படம் தலித்துகள் பற்றி பெருமை பேசும் வகையில் வெளிவந்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சாதிக் கட்சிகள் பாராட்டி வருகின்றன. முக்குலத்தோர் புலிப்படை தலைவரான கருணாஸ், இந்தப்படத்தில் தனது மகன் நடித்திருந்தாலும் அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

ஒருதரப்பினரை இழிவுபடுத்தி, மற்றொரு தரப்பினரை போற்றி எடுக்கப்படும் சாதி சம்பந்தப்பட்ட படங்களை எடுப்பவர்கள் மற்றவர்கள் மனதை புண்படுத்தி, இன்னொரு தரப்பினரை ஊக்குவிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. தங்கள் இனம் இழிவு படுத்தப்பட்டதை எதிர்க்கும் கருணாஸ் சாதி வெறியரா? அல்லது தன் இனம் கொண்டாடப்பட்டிருப்பதற்கு வாழ்த்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சியினர் சாதி வெறியர்களா?  
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடிகைகளை பார்த்ததும் ஈ போல் மொய்க்கும் ரசிகர்கள்... நிதி அகர்வாலை தொடர்ந்து சமந்தாவுக்கும் இந்த நிலைமையா?
கிறிஸ்துமஸ் விருந்தாக இந்த வாரம் தியேட்டர் & OTT-யில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன?