ரஜினியை விட தனுஷ்தான் செம்ம நடிகர்... போயஸ் கார்டன் வீட்டில் பொல்லாப்பு பட்டிமன்றம்..!

Published : Oct 07, 2019, 10:23 AM IST
ரஜினியை விட தனுஷ்தான் செம்ம நடிகர்... போயஸ் கார்டன் வீட்டில் பொல்லாப்பு பட்டிமன்றம்..!

சுருக்கம்

அயர்ன் லேடி ஜெயலலிதாவின் வீடு மட்டுமல்ல, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீடும் இருப்பது போயஸ் கார்டனில்தானே. கடந்த இரண்டு நாட்களாக அந்த பங்களாவில் நடக்கும் ஒரு கலகல பட்டிமன்றம், சற்றே சூடாகியுள்ளதாக தகவல்.

அயர்ன் லேடி ஜெயலலிதாவின் வீடு மட்டுமல்ல, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீடும் இருப்பது போயஸ் கார்டனில்தானே. கடந்த இரண்டு நாட்களாக அந்த பங்களாவில் நடக்கும் ஒரு கலகல பட்டிமன்றம், சற்றே சூடாகியுள்ளதாக தகவல். 

அது ‘நம்ம வீட்டில் செம்ம நடிகர் தலைவர் ரஜினியா? இல்லை மருமகன் தனுஷா?’ என்பதுதான். இப்படியொரு விவாதம் எழ காரணம், சமீபத்தில் வெளியான ‘அசுரன்’ படம்தான். வெற்றிமாறன் இயக்கும் படமென்றாலே தனுஷுக்கு நடிப்பு வெறி எங்கிருந்துதான் வருமென்றே தெரியாது. பின்னிப் பெடலெடுத்துவிடுவார். ஆனால் இதுவரையில் பொல்லாதவன்! ஆடுகளம்! வடசென்னை! என்று இளைஞர் ரோலாகவே பண்ணியிருக்கிறார். 

அதிலேயே தேர்ந்த நடிப்பை காட்டிய மனிதர், இப்போது வெளியாகியிருக்கும் ‘அசுரன்’ படத்தில் வயதான தோற்றம் எனும் கேரக்டரிலும் சதாய்த்திருக்கிறார். மிக வெறித்தனமான நடிப்பை தனுஷ் இதில் வழங்கியிருப்பதாக புகழ்ந்து கொண்டாடுகின்றன பத்திரிக்கைகள், மீடியாக்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலகினர். தனுஷின் தரமான இந்த வெற்றி ரஜினிக்கு பெரிய சந்தோஷம்தான். ஆனாலும் கூட போயஸ் பங்களாவில் கலகலப்பாக துவங்கிய பட்டிமன்றத்தின் போக்கு சற்றே சூடாக திசை மாறிவிட்டதாம். 

ரஜினிகாந்தும் இளமையிலேயே முதுமை வேடமிட்டு ‘நெற்றிக் கண்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் மேக் - அப்பில் அவரை வித்தியாசப்படுத்தியிருப்பர். ஆனால் இதிலோ பெரிதாய் மேக் - அப் விஷயங்கள் இல்லாமல் உடல் மொழியின் வாயிலாகவே வயசான நபரின் தன்மையை தனுஷ் காட்டியிருப்பதும், அதற்கு பெருவாரியான பாராட்டு எழுந்திருப்பதும்தான் போயஸ் வீட்டில் பரபரப்பாகி இருக்கிறது. சரி பட்டிமன்றத்தின் தீர்ப்பு என்ன? ........தனுஷ் தயாரிப்பில், ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினியோடு, தனுஷும் சேர்ந்து நடிக்க வேண்டும்! அப்போது தெரியும் யார் நடிப்பில் புலியென்று! என்பதுதானாம். டபுள் பட்டாஸ் போங்க!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

25 ஆண்டுகளில் முதன்முறையாக படையப்பா படம் பார்த்த ரம்யா கிருஷ்ணன்... இத்தனை வருஷமா ஏன் பார்க்கல தெரியுமா?
கடைசியில் மீனாவிடம் 'சென்டிமென்ட்' டிராமாவை அரங்கேற்றிய தங்கமயில்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 விறுவிறுப்பு!