காங்கிரஸ் கட்சி வேட்பாளராக களம் இறங்கும் கருணாஸ் பட நாயகி! வெற்றி உறுதியும்!

Published : Mar 27, 2019, 02:33 PM IST
காங்கிரஸ் கட்சி வேட்பாளராக களம் இறங்கும் கருணாஸ் பட நாயகி! வெற்றி உறுதியும்!

சுருக்கம்

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பற்றிய பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக மகாராஷ்டிராவில் உள்ள ஒரு தொகுதியில் கருணாஸ் மற்றும் கேப்டன் விஜயகாந்த் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள, நடிகை நவ்நித் கவுர் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

நடிகை நவ்நித் கவுர் , கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த 'அரசாங்கம்' படத்திலும் கருணாஸ்  தயாரித்து நடித்த 'அம்பா சமுத்திரம் அம்பானி' என்ற படத்திலும் நடித்தவர். மேலும் பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் ரவி ராணா என்பவரை திருமணம் செய்து கொண்ட பின் திரையுலகில் இருந்து முழுமையாக விலகினார். ரவி ராணா யுவாபிமானி என்கிற கட்சியை நடத்தி வருகிறார். மேலும் அமராவதி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

இவர் தற்போது காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து வருகிற நாடாளுமன்றத் தேர்தலை எதிர் கொள்கிறார். ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இவர் உள்ளதால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தன்னுடைய மனைவி நவ்நித் கவுரை வேட்பாளராக அறிவித்துள்ளார் ரவி ராணாவுக்கு அந்த தொகுதியில் நல்ல பெயர் உள்ளதால் இவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!