
சட்டமன்ற தேர்தல் காரணமாக, மார்ச் 26 ஆம் தேதி வெளியாக இருந்த 'டாக்டர்' பட ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 2 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் 'சுல்தான்' சொன்ன தேதியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து, சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ படம் மார்ச் 26 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் தேர்தல் வர இருப்பதால் பட வெளியீட்டை தள்ளிவைக்கிறோம். பட வியாபாரம், தேர்தல், ரசிகர்களை மனதில் வைத்து இந்த முடிவை எடுத்துள்ளோம். என படக்குழு நேற்று அறிக்கை வெளியிட்டு அறிவித்தது.
இதனால், ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாக திட்டமிட்ட படங்கள் சொன்ன தேதியில் வெளியாகுமா? என்கிற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, கார்த்தி நடித்த ’சுல்தான்’ திரைப்படத்தை ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீஸ் செய்யும் முடிவில் இருந்து படக்குழு பின்வாங்கப்போவதில்லை என படக்குழு வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தேர்தல் நாளான, ஏப்ரல் 6 ஆம் தேதி மட்டும், திரையரங்குகளில் 2 காட்சிகள் மட்டுமே ஒளிபரப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏப்ரல் 2ஆம் தேதியை விட்டால் சரியான ரிலீஸ் தேதி கிடைப்பது கடினம் என்பதாலும்... கொரோனா பிரச்சனையின் காரணமாக பல படங்கள் ரிலீஸ் ஆகாமல் உள்ளதால், குறிப்பிட்ட தேதியில் படத்தை வெளியிட பலே பிளான் போட்டுள்ளனர் படக்குழுவினர்.
இந்த படத்தில், நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.