ரஜினிக்கு ஜோடியாகிறாரா சிம்ரன்...? கார்த்தி சுப்புராஜ் ஓபன் டாக்...!

 
Published : Jun 01, 2018, 12:53 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
ரஜினிக்கு ஜோடியாகிறாரா சிம்ரன்...? கார்த்தி சுப்புராஜ் ஓபன் டாக்...!

சுருக்கம்

karthi suburaj about rajinikanth movie

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'காலா' மற்றும் '2.o' படங்களை தொடர்ந்து, இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று ஏற்கனவே அதிகாரப் பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தின் ஸ்க்ரிப்டிங் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி சுப்புராஜ்.

ஏற்கனவே இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் பரவலாக ஒரு செய்தி தீயாக பரவியது.

மேலும் பாபிசிம்ஹா உள்ளிட்ட ஒரு சில நடிகர்கள் பெயரும் உலா வந்தது. இந்நிலையில் இது போன்ற வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் இயக்குனர் கார்த்தி சுப்புராஜ்.

இது குறித்து அவர் கூறுகையில், ரஜினி படத்தை பொறுத்தவரை, விஜய் சேதுபதி மட்டும் தான் உறுதியாகியிருக்கிறார். மற்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்து பரிசீலனையில் தான் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுவது உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மேக்கப் தொல்லை எனக்கு இல்லை... நடிகை சாய் பல்லவி ஓபன் டாக்
ஆஸ்கர் ரேஸில் அடுத்த லெவலுக்கு சென்ற ஒரே ஒரு இந்திய படம் - விருதை தட்டிதூக்குமா?