
நல்ல கதை அமைந்தால் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க தயாராக இருப்பதாக நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில், இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக அறிமுகமான நடிகர் கார்த்தி, நடிகராக முதலில் நடித்த படம் பருத்தி வீரன். இந்த படம் மிக பெரிய அளவு வெற்றியை கொடுத்தது.
அதன்பிறகு நடிகராக மட்டுமே தமிழ் சினிமாவில் வலம் வந்த கார்த்தி, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் "காற்று வெளியிடை" என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது வரும் 7 ம் தேதி திரையில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி, காற்று வெளியிடை படத்தின் அறிமுக நாயகி அதிதிராவ் கலந்து கொண்டனர்.
அப்போது ரசிகர்களை சந்தித்த கார்த்தியிடம், பலதரப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன.
அப்போது அவர் கூறியதாவது,
நான் நடித்து வெளிவர உள்ள ‘காற்று வெளியிடை’ படம் ரோஜா, பம்பாய் படத்தை போன்று சர்ச்சைக்குரிய படம் அல்ல என்றும் இது ஒரு காதல் கதை என்றும் இந்த படத்தில் தான் விமானியாக நடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர், நான் உதவி இயக்குனராக இருந்தபோது எனது அண்ணனை மனதில் வைத்து ஒரு கதை எழுதினேன் என்றும், அந்த கதை 16 வயது முதல் 60 வயது வரை உள்ள ஒருவரின் வாழ்க்கை பற்றிய கதை என்றும், அதில் சூர்யாவால் மட்டுமே நடிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
இதனிடையில், தற்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும், ஆனால் நிச்சயம் வருங்காலத்தில் ஒரு படமாவது இயக்குவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர், சூர்யாவிடம் சேர்த்து நடிக்க ஆவலாக இருப்பதாகவும், நல்ல கதை அமைந்தால் அண்ணன் சூர்யாவுக்கு வில்லனாக கூட நடிக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.