விவசாயிகளுக்கு முதல் குரல் ….திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற விஷால் அதிரடி…

Asianet News Tamil  
Published : Apr 03, 2017, 05:32 AM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
விவசாயிகளுக்கு முதல் குரல் ….திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற விஷால் அதிரடி…

சுருக்கம்

file producer council electionj

சென்னையில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போடியிட்டு வெற்றி பெற்ற நடிகர் விஷால், விவசாயிகளுக்கும், திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் சிறப்பு அறிவிப்புகளை விரைவில் வெளியிடுவோம் என தெரிவித்தார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்  சென்னை கந்தசாமி நாயுடு கல்லூரியில் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் விஷால் 143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பொருளாளர் உள்ளிட்ட மற்ற பதவிகளுக்கு போட்டியிட்ட விஷால் அணியினர் அனைவரும்  வெற்றி பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால்,தேர்தலில் தனக்கு வாக்களித்த அனைவரும் நன்றி தெரிவித்தார்.

எங்கள் வெற்றி அடுத்த 2 ஆண்டுகள், சினிமாவிற்கு பொற்காலமாக அமையும் என்றும் தயாரிப்பாளர் சங்கள் வரலாறு காணாத முன்னேற்றத்தை அடையும் என்றும் விஷால் தெரிவித்தார்.

தலைவராக பதவி ஏற்றதும் இரண்டு திட்டங்கள் அறிவிக்கப்பப்படும் என்றும், அதில் ஒன்று விவசாயிகளுக்கானது என்றும் மற்றொன்று திரைப்பட தயாரிப்பாளர்களுக்கானது என்றும் கூறினார்.

மாற்றம் வர வேண்டும் என்றால் அதனை யாராலும் தடுக்க முடியாது. தனிப்பட்ட ஒரு மனிதனுக்காக, பழி வாங்கும் நடவடிக்கைகாக இந்த வெற்றி கிடைக்கவில்லை. தயாரிப்பாளர்களின் பிரச்சனைகள் தீர்வு காண விரும்பி இந்த வெற்றியை கொடுத்திருக்கிறார்கள் என்று விஷால் கூறினார்

திருட்டு விசிடி விவகாரத்தில் பதவிக்கு வருவதற்கு முன்பாக சில நடவடிக்கைகளை தான் மேற்கொண்டதாகவும், தற்போது பதவிக்கு வந்துள்ளதையடுத்து திருட்டு விசிடிக்கார்களா ? அல்லது நானா? இரண்டல் ஒன்று பார்த்துவிடவோம் என சவால் விட்டார்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Ajith Love Story: அஜித் லவ் ஸ்டோரி தெரியுமா?! ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே நடந்த உண்மை சம்பவங்கள்!
நான் எதாவது பண்ணிப்பேன் - காதல் கணவரால் கண்ணீர் விட்டு கதறிய விஜய் டிவி சீரியல் ஹீரோயின்!