'கர்ணன்' பட கண்ணபிரான் நட்டியின் திரில்லர் படம் குறித்து வெளியான அதிரடி தகவல்..!

Published : Apr 14, 2021, 07:30 PM ISTUpdated : Apr 14, 2021, 07:31 PM IST
'கர்ணன்' பட கண்ணபிரான் நட்டியின் திரில்லர் படம் குறித்து வெளியான அதிரடி தகவல்..!

சுருக்கம்

தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்துடன், 'கர்ணன்' கண்ணபிரான்...  நட்ராஜ் படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்துடன், 'கர்ணன்' கண்ணபிரான்...  நட்ராஜ் படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் சாய் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வந்த 'இன்ஃபினிட்டி' என்கிற மாறுபட்ட கதைகளம் கொண்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இறுதிகட்ட பணிகளில் மும்முரமாக நடந்து வருகிறது. “மென்பனி புரொடக்‌ஷன்ஸ்” சார்பாக மணிகண்டன், பிரபு, அற்புதராஜன் மற்றும் பாலபாஸ்கர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் வித்யா பிரதீப் கதாநாயகியாக நடிக்கிறார்.

முனீஷ்காந்த், சார்லஸ் வினோத், வினோத் சாகர், ஜீவா ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சரவணன் ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.என். ஃபாஸில் எடிட் மற்றும் டாம் ஜோவின் இசையும் கூடுதல் பலத்தை இப்படத்திற்கு சேர்த்துள்ளது.  இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளின், முக்கியத்துவத்தை உணர்த்தும் ஓர் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக இப்படம் உள்ளது.

சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கிய இக்கதை மருத்துவ துறையில் நடக்கும் கருப்பு பக்கங்களை தோலுரிப்பதாக அமையும் என படத்தின் இயக்குனர் சாய் கார்த்திக் ப்ரத்தியேகமாக கூறியுள்ளார். சென்னை மற்றும் ஈ.ஸி.ஆர் சுற்று வட்டார பகுதிகளில், தயாரிப்பாளர்களின் விடா முயற்சியால் 23 நாட்களில் படமாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளில் படக்குழு வெகு வேகமாக கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இன்ஃபினிட்டி திரைப்படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக படக்குழு புத்தாண்டு தினமான இன்று அறிவித்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் சிங்கநடை போட வரும் ரஜினி... படையப்பா 2 பற்றி ஹிண்ட் கொடுத்த சூப்பர்ஸ்டார்..!
கிரிஷ் மீது பாசமழை பொழியும் மனோஜ்... ரோகிணி ஹேப்பி; விஜயாவுக்கு ஏறும் பிபி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்