
Karisma Kapoor ex-husband Sanjay Kapur death : பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் (53) காலமானார். ஜூன் 12 ஆம் தேதி மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தில் போலோ விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவு அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அவரது மரணம் குறித்து குடும்பத்தினர் தரப்பில் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. நடிகரும் எழுத்தாளருமான சுஹேல் சேத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் சஞ்சய் கபூரின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளார். சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சஞ்சய் கபூர் ஒரு பிரபல தொழிலதிபர் மற்றும் போலோ விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்.
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது குறித்து சஞ்சய் கபூர் தனது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார். இதுவே அவரது கடைசி பதிவாகும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள் மற்றும் பிரார்த்தனைகள் என்று அவர் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை போட்ட சில மணிநேரங்களில் சஞ்சய் கபூருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதனால் அவர் மரணமடைந்தார். அவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சஞ்சய் கபூர் மற்றும் கரிஷ்மா கபூர் 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இவர்களுக்கு சமாயரா, கியான் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2016 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின்னர் பிரியா சச்தேவ் என்பவரை சஞ்சய் கபூர் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அசரியாஸ் என்ற மகன் உள்ளார். சஞ்சய் கபூரின் மரணம் குறித்து கரிஷ்மா கபூர் மற்றும் பிரியா சச்தேவ் தரப்பில் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.