சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகை கரீனா கபூருக்கு இத்தனை லட்சம் சம்பளமா?

Published : Jun 05, 2019, 11:39 AM IST
சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகை கரீனா கபூருக்கு இத்தனை லட்சம் சம்பளமா?

சுருக்கம்

சமீப காலமாக, வெள்ளித்திரை பிரபலங்கள் பலர் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியின், நடன நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் நடிகை கரீனா கலந்து கொள்ள ஒரு நாளைக்கு மட்டும் 50 லட்சம் சம்பளமாக பெற உள்ளதாக கூறப்படுகிறது.  

இந்தி தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான டான்ஸ் நிகழ்ச்சி "டான்ஸ் இந்தியா டான்ஸ்". இந்த நிகழ்ச்சியின் 7 ஆவது சீசன், விரைவில் ஆரம்பமாக உள்ளது.  இதில் நடுவராக கரீனா கலந்து கொள்ள உள்ளாராம். ஒரு மணிநேரம் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் ஒரு எபிசோடுக்கு, 10 லட்சம் சம்பளமாக அவருக்கு பேசப்பட்டுள்ளதாம். 

அந்த வகையில் பார்த்தால், ஒரு நாளைக்கு 5 நிகழ்ச்சிகளின் எபிசோடு எடுக்கப்படுகிறது. அதனால் கரீனா சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு நாளைக்கு மட்டும் 50 லட்சம் சம்பளமாக பெற உள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏற்கனவே தமிழில் நடிகர் விஜய் சேதுபதி, விஷால், வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதிஹாசன், கமல்ஹாசன் போன்ற பிரபலங்கள் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!