’உதயநிதியின் படத்தை எதிர்க்கட்சிக்காரர்களுக்குப் போட்டுக்காட்டக்கூடாது’... 144 போட்ட மு.க.ஸ்டாலின்..!

By Muthurama LingamFirst Published Feb 20, 2019, 4:36 PM IST
Highlights

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினை கதாநாயகனாக வைத்துப் படம் இயக்கியதால், தான் இயக்கிய படத்தை விரும்பிய அரசியல் தலைவர்களுக்குக் கூட போட்டுக்காட்டும் சுதந்திரம் இல்லை’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அங்கலாய்த்திருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி.

தற்போது விஜய் சேதுபதியை வைத்து ‘மாமனிதன்’ படத்தை இயக்கி முடித்திருக்கும் சீனு ராமசாமி, சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பே முடித்துக்கொடுத்த படம் ‘கண்ணே கலைமானே’. உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் நிறுவனமே தயாரித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.

தமிழக அரசியல் கட்சியின் முக்கிய தலைவர்கள் அனைவருடனும் நெருங்கிய தொடர்புவைத்துள்ள இயக்குநர் சீனு ராமசாமி, வழக்கமாக தனது படத்தின் முதல் பிரதி தயாரானவுடன் அனைவருக்கும் பிரிவியூ போட்டுக்காட்டுவது வழக்கம். இம்முறை உதயநிதியின் தந்தை மு.க.ஸ்டாலினின் உத்தரவால், தி.மு.க.வின் நிரந்தர அன்புக்குப் பாத்தியப்பட்டவரான வி.சி.க. தலைவர் திருமாவளவன் தவிர யாருக்கும் போட்டுக்காட்ட அனுமதிக்கப்படவில்லை.

இதனால் டென்சனான சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில்....@seenuramasamy
என் எல்லாப்படங்களையும்  சர்வக்கட்சி தலைவர்களுக்கு சிறப்புக்காட்சியாக திரையிடல் செய்வதுண்டு ,
இம்முறை திரு,உதயநிதி செல்வி தமன்னா நடித்து வரும் 22ல் வெளிவரும்  #’கண்ணே கலைமானே’ திரைப்படத்திற்கு அவ்வாய்ப்பில்லை.
கூட்டணிகள் தீர்மானிக்கின்றன பிரிவியூ காட்சிகளையும்..’ என்று பொங்கிப் பதிவிட்டுள்ளார்.

click me!