என் போன் நம்பரை பிளாக் பண்ணிடுங்க! மெசேஜ் பண்ணுனா ரிப்ளை பண்ணாதீங்க! வேண்டுகோள் வைத்த நடிகை பூஜா தேவரியா!

Published : Feb 20, 2019, 03:15 PM ISTUpdated : Feb 20, 2019, 03:22 PM IST
என் போன் நம்பரை பிளாக் பண்ணிடுங்க! மெசேஜ் பண்ணுனா ரிப்ளை பண்ணாதீங்க! வேண்டுகோள் வைத்த நடிகை பூஜா தேவரியா!

சுருக்கம்

பிரபல தமிழ் நடிகை பூஜா தேவரியாவின் போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதால், தன்னுடைய போன் நம்பர் வைத்திருந்தால் அதை பிளாக் செய்து விடுமாறும், யாராவது மெசேஜ் அனுப்பினால் பதில் கொடுக்க வேண்டாம் என ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் வைத்துள்ளார் .  

பிரபல தமிழ் நடிகை பூஜா தேவரியாவின் போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதால், தன்னுடைய போன் நம்பர் வைத்திருந்தால் அதை பிளாக் செய்து விடுமாறும், யாராவது மெசேஜ் அனுப்பினால் பதில் கொடுக்க வேண்டாம் என ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் வைத்துள்ளார் பூஜா .

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடித்த 'மயக்கம் என்ன' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில், குணச்சித்திர நடிகையாக அறிமுகமானவர், நடிகை பூஜா தேவரியா. 

கூத்து பட்டறையில் இருந்து தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கிய இவர்,  நடிக்கும் கதைகளை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இதுவரை, குற்றமே தண்டனை, இறைவி, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

மேலும் தற்போது கன்னட மொழியில் 'கத்தியோடு ஸுருவகித்தே' என்கிற படத்தில் அறிமுகமாக உள்ளார். 

இந்நிலையில், இவருடைய செல் போன் நேற்று காலை 10 மணிக்கு சில மர்மநபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதனால் தன்னுடைய போன் நம்பரை, வைத்திருக்கும் குடும்ப உறவினர்கள், நண்பர்கள், மற்றும் சினிமா பிரபலங்கள் உடனடியாக  எண்ணை பிளாக் செய்து விடுமாறு கூறியுள்ளார். 

மேலும் வாட்ஸ்ஆப் மூலமாக யாரவது மெசேஜ் அனுப்பினால், அதற்கு பதில் கொடுக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.  

கடந்த ஓரிரு மாதத்திற்கு முன் நடிகை ஹன்சிகாவின் போன் ஹேக் செய்யப்பட்டு அவருடைய அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி பரபராப்பை ஏற்படுத்தியதை,  தொடர்ந்து பூஜா தேவரியாவின் போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி