
பிரபல கன்னட தொலைக்காட்சி நடிகை ஷோபா நேற்று இரவு ஏற்பட்ட கார் விபத்தில் பலியாகியுள்ளார். அவருடன் பயணித்த அவரது குடும்பத்தினர் 5 பேரும் இந்த விபத்தில் பலியானார்கள். கன்னட திரையுலகினரை இந்த கோர விபத்து பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கன்னட தொலைக்காட்சி சீரியல் மகலு ஜானகியில் ‘மங்களா’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஷோபா (45). இவருக்கு பல ரசிகர்கள் உண்டு. நேற்று அவர் தனது குடும்பத்தினருடன் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள பானாசங்கரி கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். சித்ரதுர்கா அருகே அவர்கள் சென்ற காரின் டயர் திடீரென வெடித்தது.
இதில் நிலை தடுமாறிய கார் ஒரு லாரியின் மீது மோதியது. இதில், ஷோபாவோடு சேர்த்து அவரின் குடும்பத்தினர் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவத்தில் காயமடைந்த இரு குழந்தைகள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
இவரின் மறைவு கன்னட தொலைக்காட்சி நடிகை, நடிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் நடித்துக்கொண்டிருக்கும் சீரியலின் இயக்குனர் டி.என். சீதாராம் கூறுகையில் ‘எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். மிகவும் திறமையானவர். அவர் மறைந்துவிட்டார் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. “ என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.