டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 2011ல் ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘காஞ்சனா’ படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இப்படத்தின் மூலம் பிரபுதேவாவை அடுத்து ராகவா லாரன்ஸும் இந்தித்திரையுலகில் இயக்குநராக அடியெடுத்து வைக்கிறார்.

லாரன்ஸ், ராஜ்கிரண் இணைந்து நடித்த ‘முனி’ படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த ‘காஞ்சனா’வில் ராகவா லாரன்ஸ், சரத்குமார், லட்சுமி ராய் ஆகியோர் நடித்திருந்தனர். திருநங்கையாக சரத் நடித்திருந்த இப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. சுமார் 4 கோடி பட்ஜெட்டில் தயாரான அப்படம் 20 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியது.
முன்னரே இதன் ரீமேக்கிற்காக பலர் அணுகியிருந்த நிலையில் தானே இயக்கும் முடிவில் இருந்த லாரன்ஸ், படத்தின் உரிமையை யாருக்கும் தராமல் இழுத்தடித்து வந்தார். தற்போது லாரன்ஸ் பாத்திரத்தில் இந்தியின் முன்னணி ஹீரோ அக்ஷய்குமார் நடிக்க படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்கவிருக்கிறது. சரத் நடித்த திருநங்கை பாத்திரத்தில் நடிக்க பலத்த போட்டி நிலவும் நிலையில் அப்பாத்திரத்தில் மீண்டும் சரத்தோ அல்லது லாரன்ஸோ நடிக்கக்கூடும் என்று தெரிகிறது.