நிறவெறி பற்றி பேச எந்த அருகதையும் இல்லை... பிரியங்கா சோப்ரா, சோனம் கபூரை கிழித்து தொங்க விட்ட கங்கனா!

Published : Jun 11, 2020, 01:11 PM ISTUpdated : Jun 11, 2020, 01:22 PM IST
நிறவெறி பற்றி பேச எந்த அருகதையும் இல்லை... பிரியங்கா சோப்ரா, சோனம் கபூரை கிழித்து தொங்க விட்ட கங்கனா!

சுருக்கம்

அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன்,  ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின இளைஞரை, வெள்ளைக்கார போலீஸ் அதிகாரி ஒருவர் கால் முட்டியால் நசுக்கு, கதற கதற கொன்ற சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன்,  ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின இளைஞரை, வெள்ளைக்கார போலீஸ் அதிகாரி ஒருவர் கால் முட்டியால் நசுக்கு, கதற கதற கொன்ற சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியதால், பலர் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

மேலும் செய்திகள்: பண கஷ்டத்தால் ஆபாச நடிகையாக மாறிய விளையாட்டு வீராங்கனை..! அதிர்ச்சி புகைப்படங்கள்..!
 

இது சமூக நீதிக்கு எதிரான, நிறவெறி படுகொலையாக என கூறி, அமெரிக்கா முழுவதும் பெரும் கலவரம் வெடித்து வருகிறது. இந்நிலையில், கொல்லப்பட்ட கருப்பின இளைஞருக்கு ஆதரவாகவும், அந்த வெள்ளைக்கார போலீசுக்கு எதிராகவும் பல பாலிவுட் நடிகைகள் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

குறிப்பாக பிரியங்கா சோப்ரா, திஷா பதானி, சோனம் கபூர் உள்ளிட்ட சில முக அழகு கிரீம் விளம்பரங்களில் நடித்த நடிகைகளுக்கு எதிராக பொங்கி எழுந்துள்ளார் நடிகை கங்கனா.

மேலும் செய்திகள்: ஐஸ்வர்யா ராய் போலவே இருப்பதால் இளம் பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்..!
 

பணத்துக்காக சிவப்பழகு கிரீம் விளம்பர படங்களில் நடிப்பவர்களுக்கு, நிறவெறி பற்றி பேச அறுகதையே இல்லை   என கடுமையாக அவர்களை சாடியுள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது: இந்திய நடிகர், நடிகைகள் பலர், வெள்ளையாக இருப்பது தான் அழகு என, அழகு சாதன கிரீம்களை பயன்படுத்துங்கள், என்று விளம்பர படத்தில் நடிக்கிறார்கள். ஆனால், இப்போது வெட்கமே இல்லாமல் கறுப்பினத்தவர்களுக்கு எதிராக நடக்கும் இனவெறியை கண்டித்து குரல் கொடுக்கிறார்கள் என சரமாரி கேள்விகளால் கிழிந்து தொங்கவிட்டுள்ளார். இவரின் இந்த துணிச்சலான பேச்சுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும் செய்திகள்: கடைசி தொழிலாளி சொந்த ஊருக்கு செல்லும்வரை என் பணி தொடரும்..! ரியல் ஹீரோ சோனு சூட் உருக்கம்!
 

ஆனால் நான் இதுபோன்ற விளம்பரங்களில் நடித்ததும் இல்லை, இனி நடிக்க போவதும் இல்லை என தன்னுடைய முடிவில் உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கடையில் காசு பணத்தை ஆட்டைய போட்டாரு இவரு: மாமனாரை பற்றிய உண்மையை சொன்ன சரவணன்!
சீரியல் நடிகை தற்கொலைக்கான காரணம் என்ன? பின்னணியில் திடுக்கிடும் தகவல்!