
நடிகை கங்கனா ரனாவத் லாக் அப் என்கிற ரியாலிட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி போன்று 16 போட்டியாளர்களுடன் 72 நாட்கள் நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் ஜெயில் போன்ற ஒரு செட்டில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் நடிகை கங்கனாவிடம், போட்டியாளர்கள் பல்வேறு அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், முனாவர் என்கிற போட்டியாளர் தான் சிறுவயதில் எதிர்கொண்ட பாலியல் சீண்டல்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். 6 வயது முதல் 11 வயது வரை உறவினர் ஒருவரால் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டதாகவும், இந்த விஷயம் குறித்து குடும்பத்தினரிடமும் சொன்னது இல்லை எனக் கூறினார்.
இதைக்கேட்ட நடிகை கங்கனா ரனாவத், தானும் சிறு வயதில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டதாகக் கூறி அதிர்ச்சி அளித்தார். அவர் கூறுகையில், “சிறுவயதில் நான் வசித்த அதே கிராமத்தை சேர்ந்த ஒருவர் என்னை அடிக்கடி தகாத முறையில் தொடுவார். சில சமயங்களில் என்னை அழைத்து வந்து ஆடைகளை கழட்டச் சொல்வார். அப்போது எனக்கு எதுவும் புரியவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். ஆனால் இதுகுறித்து யாரும் பொதுவெளியில் பேசுவதில்லை. சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு குட் டச், பேடு டச் குறித்து பெற்றோர்கள் கற்பிப்பது அவசியம். அதன்மூலம் மட்டுமே சமூகத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் நிகழாமல் தடுக்க முடியும்” என கங்கனா கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... Thalaivar 169 : படையப்பா ஸ்டைலில் படமெடுக்கிறாரா நெல்சன்...! மீண்டும் ரஜினிக்கு வில்லியாகும் ரம்யா கிருஷ்ணன்?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.