
ட்ரீம் கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இறுதி பக்கம்'. இப்படத்திற்குக் கதை எழுதி இயக்கியிருக்கிறார் மனோ வெ. கண்ணதாசன். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ள இப்படத்துக்கு பிரவின் பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார். அம்ருதா ஶ்ரீநிவாசன், ராஜேஷ் பாலச்சந்திரன், விக்னேஷ் சண்முகம், ஸ்ரீராஜ் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.
இந்த திரைப்படம் குறித்து பேசிய மனோ வெ.கண்ணதாசன் ; திரைப்பட உலகில் ஒரு முயற்சிதான் இந்த 'இறுதிப் பக்கம்'. ஒரு கொலை நடந்து இருக்கும் . அந்தக் கொலையைச் செய்தது யார்? என்பதுதான் வெளியே தெரியும் கேள்வி.ஆனால் ஆளாளுக்கு வெவ்வேறு வகையான மன நிலையில் அதைப் பார்ப்பார்கள். வேறு வகையான கேள்விகள் இருக்கும். ஆனால் யாராலும் கொலையாளியை ஊகிக்க முடியாது. அப்படி ஒரு படமாக 'இறுதிப் பக்கம் ' இருக்கும் " என கூறியிருந்தார்.
இந்த படத்திலிருந்தும் தற்போது முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. இதை நடிகர் பிரேம் ஜீ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதன் முதல் சிங்குளாக கனவில் கவிதை என்னும் பாடலுக்கான வரிகளை இயக்குனர் மனோ வெ. கண்ணதாசன் எழுதியுள்ளார். எம்.எஸ்.ஜோன்ஸ் இசையில் பிரியங்கா என்கே மற்றும் சையத் சுபஹான் ஆகியோர் பாடியுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.