Manohar | மறைந்த நடிகர் ஆர்.என்.ஆர்.மனோகர் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி!!

Kanmani P   | Asianet News
Published : Nov 17, 2021, 06:54 PM ISTUpdated : Nov 17, 2021, 07:42 PM IST
Manohar | மறைந்த நடிகர் ஆர்.என்.ஆர்.மனோகர் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி!!

சுருக்கம்

மாரடைப்பால்  காலமான பிரபல நடிகர் ஆர்.என்.ஆர்.மனோகர் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் நடிகர் மனோகர் தமிழ் திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் நடிகராகவும் பணியாற்றுகிறார்.  இவர் 1994-ம் ஆண்டு மைந்தன் படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமாகியுள்ளார். பின்பு 1995-ம் ஆண்டு கோலங்கள் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

பின்னர் 2009-ம் ஆண்டு நகுல் நடித்த மாசிலாமணி திரைப்படம் மற்றும் வேலூர் மாவட்டம் திரைப்படத்தினை இயக்கிய தன மூலம் இயக்குனராக உருவெடுத்தார். அதோடு இவர் சமீபத்தில் முன்னணி நடிகர்களின் படமான மிருதன், கைதி, டெடி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர்.

இதற்கிடையே கடந்த 2012ஆம் ஆண்டு இவருடைய மகன் ரஞ்சன் PSBB பள்ளியில் தான் படித்து வந்துள்ளார்.இவரது மகன் ரஞ்சன் பள்ளியில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சி மேற்கொண்ட போது, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.   ரஞ்சன் நீரில் மூழ்கி  உயிரிழந்ததற்கு நீச்சல் பயிற்சியாளர் கவனக்குறைவே காரணம் என கூறப்பட்டது. பின்னர் அந்த நீச்சல் பயிற்சியாளர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருந்த மனோகரன் இயக்கத்தை கைவிட்டு படங்களில் சிறு சிறு ரோல்களில் நடித்து வந்தார்.  இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் கடந்த 20 நாட்களாக சிகிச்சை பெற்று வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில்  இன்று காலை 8.30 மணியளவில் 61 வயதான இவர் காலமானார். 

தலைவரும் முதலமைச்சருமான முக ஸ்டாலின்; திரு. மனோகர் அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் திரு. என்.ஆர். இளங்கோ உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், கலையுலக நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என தெரிவித்திருந்தார். இதையடுத்து மறைந்த நடிகர் மனோகரது வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து திமுக எம்.பி.கனிமொழி தனது ட்வீட்டர் பக்கத்தில்;  தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திரு. என்.ஆர்.இளங்கோ அவர்களின் சகோதரரும், திரைப்பட இயக்குநரும், நடிகருமான திரு. மனோகர் அவர்கள் மறைந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!