
இயக்குனர் பாண்டிராஜ் தனது மெரினா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க எஸ் கே வை அணுகினார். மெரினா கடற்கரைக்கு சென்று சுற்றுப்புறங்களை ஆய்வு செய்வதன் மூலம் அவர் தனது முதல் பாத்திரத்திற்குத் தயாரானார் சிவகார்த்திகேயன் அவரது இயல்பான நகைச்சுவை திறமை மூலம் இரசிகர்களின் மனதை வென்றெடுத்தார்..
பின்னர் மான் கராத்தே,காக்கி சட்டை, ரஜினி முருகன், ரெமோ என அடுக்கடுக்கான ரசிகர் ஈர்ப்பு படங்களை கொடுத்தார் சிவகார்த்தியேகன் .இதன் மூலம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏகபோகமானது..
2018-ம் ஆண்டு கனா படத்தின் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்த எஸ்.கே... நெஞ்சமுண்டு நேர்மை உண்டு, டான், வாழ், உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். தற்போதும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும், கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸும் இணைந்து டாக்டர் படத்தை தயாரித்துள்ளனர். பாடகராகவும், படலாசிரியராகவும் கலக்கி வரும் சிவகார்த்தியேன் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, கனா, மாப்பிளை சிங்கம், தும்பா உள்ளிட்ட படங்களில் பாடியுள்ளார்.. அதேபோல கோலமாவு கோகிலா, கூர்க்கா, டாக்டர்,பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் பாடலாசிரியராக பணியாற்றியுள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் பெண் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்த இந்த படம் விவசாயிகளின் பரிதாபம் சார்ந்த கதைக்களமாகவும் சாதிக்க என்னும் ஏழை பெண்ணும் கண்ணீருமாய் நகர்ந்தது..இதில் வாயாடி பெத்தபுள்ள என்னும் பாடலை சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மகள் ஆராதனா இணைந்து பாடியிருந்தார்...இன்றளவும் இந்த பாடல் பேமஸ்தான்...படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது..
சிவகார்த்திகேயனின் மான் கராத்தே படத்தில் நெருப்பு குமராக நடித்த அருண்ராஜா காமராஜ் இயக்கிய இந்த படத்தில் கிரிக்கெட் கோச்சாக முக்கிய வேடத்தில் சிவகார்த்திகேயன் நடித்து அசத்தி இருந்தார்..
படம் வெளியாகி மூன்றாண்டுகளை கடந்துள்ள நிலையில் தற்போது கனா படம் சீனாவில் வெளியாகவுள்ளது..இந்த செய்தியை படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.