
பள்ளி மாணவர்களின் வாழ்வியலை மிகவும் எதார்த்தமாக பதிவு செய்த தொடர் என்றால், அது விஜய் டிவி-யில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் தான். ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடராக இது இன்றளவும் இருந்து வருகிறது.
இந்த தொடர் பள்ளி பருவத்தை மையமாக வைத்து 2 சீசன்கள் ஒளிபரப்பப்பட்டது. அதேபோல் கல்லூரி வாழ்வியலையும் மையமாக வைத்து 2 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பானது.
இந்த தொடர் மூலம் அறிமுகமானவர்கள் தற்போது சினிமாவிலும், சீரியலிலும் முன்னணி நடிகர் நடிகைகளாக வலம் வருகின்றனர். பிக்பாஸ் பிரபலங்களான ராஜு, கவின், ரியோ ஆகியோரெல்லாம் இன்று நட்சத்திரமாக ஜொலிக்க அடித்தளம் அமைத்து கொடுத்தது இந்த தொடர் தான்.
இந்நிலையில், தற்போது கனா காணும் காலங்கள் தொடர் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புது Batch உடன் தொடங்க உள்ள இந்த சீசன் பள்ளி பருவத்தை மையமாக வைத்து உருவாக உள்ளது.
மேலும் இந்த புது சீசனின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த தொடர் விஜய் டிவி-யில் ஒளிபரப்பப்படாது. அதன் அதிகாரப்பூர்வ ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியில் பிக்பாஸ் போன்ற முன்னணி நிகழ்ச்சிகள் நேரடியாக ஓடிடி-யில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. தற்போது அதே நடைமுறை கனா காணும் காலங்கள் தொடர் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.