இக்குற்றம் செய்வதை உடனே நிறுத்த வேண்டும்...கமல் வேண்டுகோள்....

First Published Mar 2, 2017, 4:17 PM IST
Highlights
kamalhassan replay for social media


உலக நாயகன் கமல்ஹாசன்  தான் சமீப காலமாக செம ட்ரெண்டில் உள்ளார். அவர் தொடர்ந்து ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் செலுத்துவதால் அவரை பலர் தொடாது பின்பற்றி வருகின்றனர்.

அதே போல் குறிப்பாக  ஒரு இணையதளத்தில் மட்டும் சில வன்முறை கருத்துக்கள் பதிவாகியுள்ளது. இந்த கருத்துக்கள் தன்னுடையது அல்ல என்றும், இதுபோல் தன்னுடைய பெயரில் வரும் கருத்துக்களை அந்த இணையதளம் உடனே நிறுத்த வேண்டும் என்றும் உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் ஒரு  தளத்தில் என் பெயரால் எழுப்பப்ப படும் வன்மறை அறிவுறைகளும் வாக்குறுதிகளும் அவர்கள் கற்பனையே, என் கூற்றல்ல என்றும். போராடும் உத்வேகத்தில் எதையும் சொல்வது குற்றமாகும். 

எனக்கெதிரான குற்றம் மட்டுமல்ல, நாட்டுக்கும் இளைஞர்களுக்கும் எதிரானது.  இக்குற்றம் செய்வதை உடனே நிறுத்தவேண்டும் என்று அந்த இணையதளத்திற்கு கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் 'யாரையும் மரியாதைக்குறைவாக பேசுவதை நம் இயக்கத்தார் செய்யாதிருக்க வேண்டும். நம்மைப்பற்றி எழுப்பப்படும் கேள்விகளுக்கும் அவதூறுகளுக்கும் பதில் தருவது நம் கடமை, பதிலடி கொடுப்பது வன்முறை' என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

click me!