
உலக நாயகன் கமல்ஹாசனுடன் ஒரு படத்திலாவது பணிபுரிய வேண்டும் என்று பல நட்சத்திரங்கள் ஏங்கிக்கொண்டிருக்கும் நிலையில், ஒரு பிரபல நடிகர் கமலே போன் போட்டு அழைத்தும் வர முடியாது என்று கூறிவிட்டாராம்.
இவர் வேற யாரும் இல்லை...? சமீபத்தில் வெளியான 'பவர்பாண்டி' படைத்து மூலம், தன்னோட இமேஜை உயர்த்தியுள்ள ராஜ்கிரண்தான்.
தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கமல்ஹாசன் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ராஜ்கிரணுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாம். இதற்கு வர ராஜ் கிரண் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் உலகநாயகன் கமலஹாசனே போன் போட்டு, நிகழ்ச்சிக்கு வருமாறு கூறியுள்ளார். இதற்கு ராஜ்கிரண் நாம் நட்பு ரீதியாக பல மணிநேரம் கூட பேசலாம், ஆனால் தனக்கு எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள விருப்பம் இல்லை என கறாராக கூறிவிட்டாராம்.
ராஜ்கிரணின் இந்த முடிவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் கூட ராஜ்கிரண் கோடி பணம் கொடுத்தாலும், மக்களை ஏமாற்றும் வகையில் எடுக்கும் விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.