
உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மகாபாரதம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த கருத்து இந்து மதத்தை அவமதிப்பதாக உள்ளது என்று கூறி, வள்ளியூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆதிநாத சுந்தரம் என்பவர் சமீபத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு குறித்து விசாரணை செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று கும்பகோணம் மாவட்ட நீதிமன்றத்தில் அதே காரணத்திற்காக மேலும் ஒரு வழக்கு இன்று தொடரப்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சியின் கும்பகோணம் மாவட்டச் செயலாளர் பாலா இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,.
ஏற்கனவே கமல்ஹாசன் தனது டுவிட்டரில் வன்முறையை தூண்டி வரும் கருத்துக்களை பதிவு செய்து வருவதாகவும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் சென்னை காவல்துறையிடம் அரசியல் கட்சி ஒன்று புகார் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.