Vikram FDFS : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில் விக்ரம் படத்தின் முதல் காட்சியை பார்த்து ரசித்தனர்.
கமல் நடிப்பில் கடைசியாக வெளியான படம் விஸ்வரூபம் 2. இப்படம் கடந்த 2018-ம் ஆண்டு ரிலீசானது. இதன்பின்னர் அரசியல் பணிகளில் பிசியானதால் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார் கமல். பின்னர் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்ட கமல், விக்ரம் படத்துக்காக லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைத்தார்.
இப்படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, சூர்யா, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த விக்ரம் திரைப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீசாகி உள்ளது.
கமல்ஹாசன் 4 ஆண்டுகளுக்கு பின் திரையில் தோன்றி உள்ளதால், இப்படத்தை ரசிகர்கள் மாஸாக கொண்டாடி வருகின்றனர். அதிகாலையிலேயே தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள், பட்டாசு வெடித்தும், கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம், மேள தாளங்கள் முழங்க நடனமாடியும் தடபுடலாக கொண்டாடினர்.
விக்ரம் படக்குழுவும் அதிகாலை 4 மணிக் காட்சியை ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்தனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில் விக்ரம் படத்தின் முதல் காட்சியை பார்த்து ரசித்தனர். அவர்களுக்கு ரசிகர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையும் படியுங்கள்... 'விக்ரம்' படத்தில் சூர்யா கேமியோ ரோலில் நடிக்க என்ன காரணம் தெரியுமா?
in 💥❤️ pic.twitter.com/p4vm8H6wvF
— 🔗S H I V A 🔗 (@PeakyBoy07)Anii 👑💥💥 in ❤️ pic.twitter.com/fJYYZgKGQi
— 🔗S H I V A 🔗 (@PeakyBoy07)