கமலால் அவ்வளவு பெரிய அசிங்கத்துக்கு ஆளான டைரக்டர் ஷங்கர்....

Published : Mar 27, 2019, 10:45 AM IST
கமலால் அவ்வளவு பெரிய அசிங்கத்துக்கு ஆளான டைரக்டர் ஷங்கர்....

சுருக்கம்

’இந்தியன் 2’ என்ற படத்துக்கு பெரிய தொகையாக அட்வான்ஸ் வாங்கியிருக்கிறோம். அப்படம் துவங்கி ஒரு வார கால படப்பிடிப்பு கூட நடக்காமல் அந்தரத்தில் நிற்கிறது என்கிற எண்ணம் துளியும் இல்லாமல் அரசியலில் கமல் முழு மூச்சில் இயங்கிக்கொண்டிருக்க, பட இயக்குநர் ஷங்கரோ கமலால் தொடர்ந்து சில அவமானங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்.

’இந்தியன் 2’ என்ற படத்துக்கு பெரிய தொகையாக அட்வான்ஸ் வாங்கியிருக்கிறோம். அப்படம் துவங்கி ஒரு வார கால படப்பிடிப்பு கூட நடக்காமல் அந்தரத்தில் நிற்கிறது என்கிற எண்ணம் துளியும் இல்லாமல் அரசியலில் கமல் முழு மூச்சில் இயங்கிக்கொண்டிருக்க, பட இயக்குநர் ஷங்கரோ கமலால் தொடர்ந்து சில அவமானங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்.

ஷங்கர் இயக்கத்தில். கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும்  ’இந்தியன் 2’ கடந்த ஜனவரி 18,  படப்பிடிப்பு சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கி ஒருவார கால படப்பிடிப்புக்குப் பின்னர் நொண்டியடிக்க ஆரம்பித்தது. அப்போது எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்ததபோது கமலின் ஒப்பனை பொருத்தமில்லாமல் இருந்ததாகவும்  அதனால் அதைச் சரி செய்து படப்பிடிப்பு தொடங்கும் என்றார்கள். அதன்பின் கமல் அரசியல் வேலைகளில் ஈடுபட்டதால் படப்பிடிப்பு தாமதம் என்றார்கள்.

இந்தக் காரணங்கள் ஓரளவே  உண்மை என்றாலும் இதைத் தாண்டி ஒரு பெரிய விசயம் நடந்திருக்கிறது.

படப்பிடிப்பு தொடங்கியவுடன் நிறுத்தியதோடு, கமலின் ஒப்பனை உட்பட கூடுதலாக செலவு பிடிக்கும் சில விசயங்களை செய்ய வேண்டும் என்று இயக்குநர் ஷங்கர் கேட்டவுடன் கடுப்பாகிவிட்டதாம் தயாரிப்பு நிறுவனம். அத்தோடு கமல் வரும் வரை காத்திருக்காமல் அடுத்த படத்தில் நடிக்கச்செல்லும் மற்ற நடிகர்களை புதிதாக ஒப்பந்தம் செய்யவேண்டியிருக்கும் என்றும் ஷங்கர் தரப்பில் சொல்லப்பட்டதாம். இது அந்நிறுவனத்தை இன்னும் எரிச்சலுக்குள்ளாக்கியது.

உடனே சுதாரித்துக்கொண்ட லைகா நிறுவனம் , இவ்வளவு தொகைக்குள் இந்தப்படத்தை எடுத்து முடிப்பேன் அதற்கு மேல் செலவானால் அதற்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று ஒரு ஒப்பந்தம் தயாரித்து ஷங்கரிடம் கொடுத்துவிட்டார்களாம். இதில் கையெழுத்துப் போட்டால் படப்பிடிப்பை நடத்துவோம் இல்லையென்றால் இப்படியே போய்விடலாம் என்று சொல்லிவிட்டார்களாம்.

அதிர்ந்து போன ஷங்கர் சில நாட்கள் யோசனைக்குப் பிறகு அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டாராம். இதுவரை 13 படங்கள் வரை  எந்த தயாரிப்பாளருக்கும் பட்ஜெட் சொல்லாமல் இஷ்டத்துக்கு எடுத்து வந்த ஷங்கர் கமல் செய்யும் குளறுபடிகளால்  14 ஆவது படத்தில் இப்படி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடும் நிலைக்கு ஆளாகிவிட்டார் என்கிறார்கள். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!